twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தள்ளிப் போகிறதா வலிமை ரிலீஸ்.. ஒரு பக்கம் புரமோஷன்.. இன்னொரு பக்கம் லாக்டவுன்.. என்ன ஆகப் போகிறது?

    |

    சென்னை: இயக்குநர் ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படமும் வரும் ஜனவரி 7ம் தேதி வெளியாகி விடும் என தீவிர புரமோஷன்கள் நடத்தப்பட்டன. ஆனால், கடைசி நேரத்தில் தள்ளி வைக்கப்பட்டது.

    பிரபாஸின் ராதே ஷ்யாம் மற்றும் நடிகர் அஜித் குமாரின் வலிமை படங்களும் ரிலீஸ் ஆகாமல் தள்ளிப் போகும் என பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    வெறும் 3 லட்சம் தானா...பெட்டி கொண்டு வந்தவர் சம்பளத்தை விட குறைவா இருக்கே வெறும் 3 லட்சம் தானா...பெட்டி கொண்டு வந்தவர் சம்பளத்தை விட குறைவா இருக்கே

    ஒட்டுமொத்தமாக திரையரங்குகள் மீண்டும் முடக்கப்பட போவதாக அதிர்ச்சியூட்டும் தகவல்களும் கொரோனா பரவல் காரணமாக வெளியாகி உள்ளது ஒட்டுமொத்த சினிமா துறையையும் கலங்கடித்துள்ளது.

    வந்தே தீருவேன்

    வந்தே தீருவேன்

    அஜித்தின் வலிமை திரைப்படம் கொரோனா பரவல் காரணமாக தள்ளிப் போகுமா? என்கிற கேள்விகள் எழுந்த நிலையில், படத்தை ரிலீஸ் செய்வதில் தயாரிப்பாளர் போனி கபூர் உறுதியுடன் இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகின. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி வெர்ஷனும் திட்டமிட்டபடி ஜனவரி 13ம் தேதி வெளியாகும் என புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார்.

    மீண்டும் லாக்டவுன்

    மீண்டும் லாக்டவுன்

    ஆனால், வலிமை படம் மட்டுமல்ல எந்தவொரு புதிய படமும் ரிலீசாகாது என்பது போல மீண்டும் லாக்டவுன் அமலாக போகிறது என Lockdown ஹாஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. பல்வேறு மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக போடப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் லாக்டவுன் அமலாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    அஜித் அனுமதிப்பாரா

    அஜித் அனுமதிப்பாரா

    கொரோனா காரணமாக இந்த ஆண்டு மே மாதம் தனது பிறந்தநாளை முன்னிட்டு வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட வேண்டாம் என அஜித் குமார் அறிவுறுத்தியதாக கூறப்பட்ட நிலையில், தற்போது ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், வலிமை படத்தை திரையரங்குகளில் வெளியிட அனுமதிப்பாரா? என்கிற கேள்வியும் சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது.

    வீக்கெண்ட் லாக்டவுன்

    வீக்கெண்ட் லாக்டவுன்

    கர்நாடகாவில் கொரோனா கட்டுப்பாடுகளை முன்னிறுத்தும் விதமாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிறுகளில் வீக்கெண்ட் லாக்டவுன் போடப்பட்டுள்ளது. மேலும், திரையரங்குகளில் 50 சதவீதம் மட்டுமே அனுமதி என்கிற அறிவிப்பும் ரசிகர்கள் மற்றும் சினிமா உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    அதிகாரப்பூர்வ அறிவிப்பு

    அதிகாரப்பூர்வ அறிவிப்பு

    வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக ஒத்திவைக்கப்படும் வாய்ப்புகள் அதிகளவில் இருப்பதாக ஏகப்பட்ட சினிமா டிராக்கர்கள் ட்வீட்களை போட ஆரம்பித்து விட்டனர். மறுபுறம் வலிமை படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியிடப் போகிறோம் என போனி கபூர் அறிவித்து வருகிறார்.

    குழப்பத்தில் ரசிகர்கள்

    குழப்பத்தில் ரசிகர்கள்

    வலிமை படம் வெளியாகும் அஜித் குமாரின் தரிசனத்தை தியேட்டர்களை பார்த்து தெறிக்கவிடலாம் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் அஜித் ரசிகர்களுக்கு இந்த திடீர் அறிவிப்புகள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. எதுவாக இருந்தாலும் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக லாக்டவுன் அறிவிப்பை வெளியிட்டால் மட்டுமே வலிமை படம் ரிலீஸ் தள்ளிப் போகும் என்பது குறிப்பிடத்தக்கது. வெயிட் பண்ணி பார்ப்போம்.

    English summary
    Tamil Nadu theaters are also planning to shut down due to raise of Omicron and Corona cases will may affect Valimai release.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X