ஜாக்கி சான் பட சீனை அப்படியே ஆட்டையை போட்டாரா எச். வினோத்.. வலிமையில் எல்லாமே காப்பியா?

சென்னை: அஜித்தின் வலிமை திரைப்படம் முதல் வாரத்தில் இருந்த மவுசு அப்படியே ஒட்டுமொத்தமாக குறைந்து விட்டதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

தமிழ்நாட்டு அளவில் வலிமை திரைப்படம் இன்னமும் 100 கோடி ரூபாய் வசூலை கூட எட்டவில்லை என சில டிராக்கர்கள் சத்தியம் செய்யாத குறையாக கூறி வருகின்றனர்.

ஏற்கனவே மெட்ரோ மற்றும் வால்டர் வெற்றிவேல் படங்களின் காப்பி தான் வலிமை என ட்ரோல்கள் பறந்த நிலையில், தற்போது ஜாக்கி சான் படக் காட்சியை அப்படியே அப்பட்டமாக இயக்குநர் எச். வினோத் வைத்திருப்பதையும் நெட்டிசன்கள் கண்டுபிடித்து கலாய்த்து வருகின்றனர்.

வசூல் பாதிப்பு

வசூல் பாதிப்பு

வலிமை படம் வெளியாவதற்கு முன்பாக இருந்த எதிர்பார்ப்பு படம் வெளியானதும் அப்படியே குறைந்து போய்விட்டது. வலிமை திரைப்படத்தின் வீக்கான திரைக்கதை தான் இதற்கு காரணம் என ஏகப்பட்ட விமர்சகர்களும் படத்தை கழுவி ஊற்றி விட்டனர். முதல் வாரத்தில் படத்திற்கு இருந்த புக்கிங் ஸ்பீடு இரண்டாவது வாரத்தில் அப்படியே குறைந்து விட்டது. ஹே சினாமிகா, தி பேட்மேன் உள்ளிட்ட படங்கள் இந்த வாரம் வெளியான நிலையில், தியேட்டர்களும், காட்சிகளும் அப்படியே குறைந்து விட்டன.

டாக்டர், மாநாடு

டாக்டர், மாநாடு

கடந்த ஆண்டு வெளியான சிவகார்த்திகேயனின் டாக்டர் மற்றும் சிம்புவின் மாநாடு உள்ளிட்ட படங்கள் கொரோனா பரவலுக்கு இடையேயும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஒவ்வொரு வாரமும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதிய நிலையில், நல்ல வசூலை பெற அந்த படங்களின் திரைக்கதை தான் காரணம் என்கின்றனர். வலிமை படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு வராததற்கு காரணமும் அதே ஸ்க்ரீன் பிளே தான் என்கின்றனர்.

படமே காப்பி

படமே காப்பி

மெட்ரோ மற்று வால்டர் வெற்றிவேல் படங்களின் அப்பட்டமான காப்பி தான் வலிமை படத்தின் கதை என்று நெட்டிசன்கள் வலிமை படத்தின் திரைக்கதையையும் அந்த படங்களின் திரைக்கதைகளையும் ஒப்பிட்டு பங்கமாக ட்ரோல் செய்து வந்தனர். இந்நிலையில், இன்னொரு காப்பி கேட் காட்சியையும் நெட்டிசன்கள் கண்டுபிடித்து கலாய்த்து வருகின்றனர்.

ஜாக்கி சான் பட சீன்

ஜாக்கி சான் பட சீன்

கடந்த 2004ம் ஆண்டு ஜாக்கி சான் நடிப்பில் வெளியான நியூ போலீஸ் ஸ்டோரி படத்தில் ஜாக்கி சான் ஆட்களை அந்தரத்தில் கட்டி வைத்து வில்லன் மிரட்டுவார். அதே காட்சியை அப்படியே ஆட்டையை போட்டு இயக்குநர் வினோத் வலிமை படத்தில் வைத்திருக்கிறார் என வீடியோவுடன் கம்பேர் செய்து பங்கம் பண்ணியுள்ளனர்.

Recommended Video

Valimai படத்தில் Karthikeya -விற்கு ஜோடியாக நடித்த Sara யார்?? | Valimai Banij
அட்லி பண்ணாதான் காப்பியா

அட்லி பண்ணாதான் காப்பியா

இந்த வீடியோவை ஷேர் செய்து விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களை ஓட்டி வருகின்றனர். மேலும், அட்லி பண்ணதான் காப்பியா? எச். வினோத் பண்ணா காப்பி இல்லையா? இதை மட்டும் எப்படி இன்ஸ்பிரேஷன் என அஜித் ரசிகர்கள் இப்போ மட்டும் முட்டுக் கொடுத்து வருகின்றனர் என கேட்டு சமூக வலைதளங்களில் சண்டை போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X