வனிதா அக்காவுக்கு டொனால்ட் ட்ரம்ப் கிஃப்ட் அனுப்பியிருக்காரா.. அவரே ஷேர் செய்த போட்டோ!
சென்னை: நடிகை வனிதா அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனக்கு கிஃப்ட் அனுப்பியிருப்பதாக ஷேர் செய்துள்ள போட்டோ வைரலாகி வருகிறது.
Recommended Video
நடிகை வனிதா கடந்த ஜூன் மாதம் தனது காதலரான பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணமாகி கல்லூரியில் படிக்கும் மகனும் பள்ளியில் படிக்கும் மகளும் உள்ளனர்.

சர்ச்சையான திருமணம்
அவரது மனைவியை விவாகரத்து செய்யாமலேயே அவர் இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார். இதனால் வனிதா - பீட்டர் பாலின் திருமணம் பெரும் சர்ச்சையானது. இதனை தொடர்ந்து லக்ஷ்மி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவீந்தர் உள்ளிட்டோர் பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

ஹாட் டாப்பிக்
இதனால் கடுப்பான வனிதா, அவர்களை கடுமையாக விமர்சித்தார். மேலும் காவல்நிலையத்திலும் அவர் மீது புகார் அளித்தார். இதன் தொடர்ச்சியாக பல நாட்கள் அவரது திருமண விவகாரம் ஹாட் டாப்பிக்காக இருந்தது. ஒரு பக்கம் வனிதாவின் மூன்றாவது திருமணம் பல பிரச்சனைகளை சந்தித்தாலும் மற்றொரு பக்கம் பலரும் வனிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வேலையில் கவனம்
எத்தனை எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும் அதையெல்லாம் எளிமையாக கடந்து தனது வேலையில் கவனத் செலுத்து வருகிறார் வனிதா. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நடிகை வனிதா அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

கிஃப்ட் பார்சல்
இந்நிலையில் நடிகை வனிதா தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள ஒரு போட்டோ பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது. அதாவது, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிடம் இருந்து தனக்கு வந்துள்ளதாக ஒரு கிஃப்ட் பார்சலை ஷேர் செய்திருக்கிறார்.

ட்ரம்ப் கிஃப்ட்
கறுப்பு நிறத்தில் உள்ள அந்த பார்சலில் டியர் வனிதா அன்ட் பீட்டர் பால், யுனைட்டெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்காவில் இருந்து ஒரு பரிசு, எங்களின் வீழும் பொருளாதாரத்திற்கு உங்களின் பங்களிப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் டொனால்ட் ட்ரம்பின் பெயருடன் அவரது கையெழுத்தும் இடம்பெற்றுள்ளது.

நம்புறமாதிரியா இருக்கு?
இதனை பார்த்த நெட்டிசன்கள், அதில் மேட் இன் சீனா என குறிப்பிடப்பட்டுள்ளதை குறிப்பிட்டு, இதிலிருந்தே தெரியவில்லையா இது போலியானது என்று என விமர்சித்துள்ளனர். இன்னும் சிலர் இதெல்லாம் நம்புவது போன்றா உள்ளது என்றும் கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











