'மீண்டும் காதலில்.. இப்போ உங்களுக்கு சந்தோஷமா?' நடிகை வனிதாவின் திடீர் பதிவால் பரபரப்பு!

By

சென்னை: நடிகை வனிதா விஜயகுமார், மீண்டும் காதலில் இருப்பதாகக் கூறியுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Recommended Video

Top 10 2020 celebrity wedding | Rana to Kajal - Filmibeat Tamil

நடிகை வனிதா விஜயகுமார், திருமணம், விவாகரத்து, காதல், தகராறு என பரபரப்பில் இருக்கிறார் சமீப காலமாக.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் இன்னும் பரபரப்பானார் வனிதா.

திருமணம் விவாகரத்து

திருமணம் விவாகரத்து

நடிகர் விஜயகுமாரின் மகளான இவர், கடந்த 2000 ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்தார். 2007 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்த அவர், உடனடியாக ஆனந்த் ஜெயராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2012 ஆம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்தார்.

அவுட்டிங் போட்டோஸ்

அவுட்டிங் போட்டோஸ்

பின்னர் 8 ஆண்டுகள் கழித்து, சில மாதங்களுக்கு முன் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகு இருவரும் அடிக்கடி எடுத்துக்கொள்ளும் அவுட்டிங் புகைப்படங்கள் வைரலாயின. இதற்கிடையே தன்னை முறையாக விவாகரத்து செய்யாமல் வனிதாவை அவர் திருமணம் செய்துகொண்டதாக பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் ஹெலன் புகார் தெரிவித்திருந்தார்.

தீர்த்தனர்

தீர்த்தனர்

இதையடுத்து, சோசியல் மீடியாவில் பரபரப்பு விவாதங்கள் எழுந்தன. நடிகை வனிதாவுக்கு எதிராகவும் எலிசபெத் ஹெலனுக்கு ஆதரவாகவும் பலர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். நடிகை வனிதாவை பலர் மோசமாக திட்டியும் தீர்த்தனர். அதற்கு அவரும் பதிலடி கொடுத்து வந்தார்.

கடுமையாக விளாசல்

கடுமையாக விளாசல்

இந்தப் பிரச்னையில் கருத்து தெரிவித்த நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனை, நடிகை வனிதா இணையதளம் ஒன்றின் நேரலையில் கடுமையாக விளாசினார். ஒருமையில் திட்டிய அவர், போடி வாடி என்றும் சொன்னார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு நஷ்ட ஈடு கேட்டு, நோட்டீஸ் அனுப்பினார் லட்சுமி ராமகிருஷ்ணன். பதிலுக்கு அவரும் நோட்டீஸ் அனுப்பினார்.

வீட்டை விட்டு

வீட்டை விட்டு

இந்நிலையில் நடிகை வனிதா விஜயகுமாருக்கும் பீட்டர் பாலுக்கும் பிரச்னை ஏற்பட்டது. இதனால் பீட்டர்பாலை, வனிதா வீட்டை விட்டு வெளியேற்றியதாகக் கூறப்பட்டது. தாங்கள் பிரிந்து விட்டதை நடிகை வனிதாவும் உருக்கமான போஸ்ட் மூலம் உறுதிப்படுத்தி இருந்தார்.

நிராகரித்து விட்டார்

நிராகரித்து விட்டார்


இந்நிலையில், நடிகை ஹெலன் தொடர்ந்த வழக்கில் வரும் 23 ஆம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே பீட்டர் பாலுடன் வாழ, நடிகை வனிதா விரும்பியதாகவும் ஆனால் பீட்டர்பால் அவரை நிராகரித்து விட்டதாகவும் வதந்திகள் வந்தன. இதை நடிகை வனிதா மறுத்திருந்தார்.

திடீர் ஆச்சரியம்

திடீர் ஆச்சரியம்

இதற்கிடையே நடிகை வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மீண்டும் காதலில்.., இப்போது உங்களுக்கு சந்தோஷமா? என்று பதிவு செய்து அதை நடிகை உமா ரியாஸ்கானுக்கு டேக் செய்துள்ளார். இதையடுத்து நெட்டிசன்ஸ், திடீர் ஆச்சரியத்தில் உறைந்துள்ளனர்.

இன்னொரு காதலா?

இன்னொரு காதலா?

நடிகை வனிதா, அதற்குள் இன்னொரு காதலில் விழுந்துவிட்டாரா என்று அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், இந்த கேள்வியை அவருடைய இன்ஸ்டாவில் பதிவில் கேட்க முடியவில்லை. ஏனென்றால் இந்த பதிவுக்கு மட்டும் வனிதாக்கா கமென்ட் பகுதியை ஆஃப் செய்துவிட்டார். அதனால் வேறு எதற்காகவோ அவர் இப்படி போஸ்ட் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X