தியாகி, துரோகி: சிம்பு பற்றி சொல்கிறாரா வெங்கட் பிரபு?
Recommended Video
சென்னை: இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட வீடியோவை பார்த்தவர்களால் அவர் சிம்பு மற்றும் மாநாடு படம் பற்றி தான் சூசகமாக பேசுகிறார் என்று தெரிவித்துள்ளனர்.
பூசினாற் போன்று இருந்த சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கத் தான் இங்கிலாந்துக்கு சென்று தனது உடல் எடையை வெகுவாக குறைத்துவிட்டு வந்தார். ஆனால் நாடு திரும்பிய அவர் மாநாடு படத்திற்கு பதில் மஃப்டி ரீமேக்கில் நடிக்கச் சென்றுவிட்டார்.
இதையடுத்து கால விரயம் காரணமாக சிம்புவை மாநாடு படத்தில் இருந்து நீக்குவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார்.
வெங்கட் பிரபு
மாநாடு படத்தில் இருந்து சிம்பு நீக்கப்பட்டது குறித்து வெங்கட் பிரபு வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில் அவர் மூன்று எழுத்து வசனம் அடங்கிய வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டு, அருமையான வசனங்கள் !!! யப்பா!!! இதுவும் 3 எழுத்து!!! யாருப்பா ரைட்டர் !!! என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மாநாடு
வெங்கட் பிரபு வெளியிட்ட வீடியோவை பார்த்தவர்களோ அவர் சிம்பு மற்றும் மாநாடு பற்றி தான் பேசுகிறார் என்று தெரிவித்துள்ளார்கள். முதலில் மாநாடு படம் டிராப் என்று நினைத்து தயாரிப்பாளரை நீக்கிவிட்டு வேறு ஒருவரை வைத்து படம் எடுக்குமாறு சிம்பு ரசிகர்கள் வெங்கட் பிரபுவிடம் கோரிக்கை விடுத்தார்கள். ஆனால் அதன் பிறகே சிம்புவை தான் டிராப் செய்துவிட்டார்கள் என்பது அவர்களுக்கு தெரிய வந்தது.

வருத்தம்
என்ன வெங்கட் பிரபு சார், இப்படி செஞ்சுட்டீங்க. மாநாடு அப்டேட்டுக்காக காத்திருந்த எங்களுக்கு சிம்புவை நீக்கிவிட்டதாக தெரிவித்து தலையில் இடியை இறக்கிவிட்டீர்களே. நீங்களும், சிம்புவும் சேர்ந்து படம் பண்ண வேண்டும் என்று நாங்கள் பல ஆண்டுகளாக காத்திருந்தோம். அது கை கூடி வந்த நேரத்தில் இப்படியாகிவிட்டதே என்று சிம்பு ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

மகாமாநாடு
மாநாடு படத்தில் இருந்து நீக்கப்பட்ட வேகத்தில் மகாமாநாடு படத்தை இயக்கி, நடிக்கப் போகிறார் சிம்பு என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. படத்தை சிம்புவின் அப்பா டி. ராஜேந்தர் தான் தயாரிக்கிறார். பட்ஜெட் ரூ. 125 கோடியாம். ஹீரோயின், பிற நடிகர்கள், நடிகைகளின் விபரம் விரைவில் வெளியிடப்படுமாம்.


Click it and Unblock the Notifications