மாநாடு தந்த வெற்றி.. அடுத்து வெங்கட் பிரபு அடல்ட் படத்தை இயக்கப் போறாராம்.. ஹீரோ யார் தெரியுமா?
சென்னை: மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில், அடுத்து எந்த முன்னணி ஹீரோவை வைத்து வெங்கட் பிரபு படம் இயக்கப் போகிறார் என திரையுலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்க அடல்ட் காமெடி படம் ஒன்றை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இப்போ தான் டிராக் மாறி சூப்பர் ஹிட் படத்தை கொடுத்திருக்காரு வெங்கட் பிரபு மறுபடியும் 18 பிளஸ் கான்செப்ட் ஏன் என கேள்விகளும் எழுந்துள்ளன.
ஆனால், இந்த படம் ஏற்கனவே திட்டமிடப்பட்டதாகவும் வெகு விரைவாக படத்தை முடிக்க வெங்கட் பிரபு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜாலியான இயக்குநர்
பா. ரஞ்சித் மாதிரி எனக்கு குறியீடுகள் பற்றி எல்லாம் தெரியாது. பசங்களோட செம ஜாலியா சேர்ந்து படம் பார்க்குற மாதிரி தான் என் படங்களை இயக்கிக் கொண்டு வருகிறேன் என சமீபத்திய பேட்டியில் கூட கூறியிருந்தார் இயக்குநர் வெங்கட் பிரபு. சென்னை 600028, கோவா, சரோஜா, பிரியாணி, மங்காத்தா, மாஸ் என்கிற மாசிலாமணி, பார்ட்டி என படு ஜாலியாக படங்களை இயக்கி வருகிறார்.

வெற்றி மாநாடு
மங்காத்தா படத்திற்கு சூர்யாவை வைத்து வெங்கட் பிரபு இயக்கிய மாசு என்கிற மாசிலமணி மற்றும் கார்த்தியை வைத்து இயக்கிய பிரியாணி உள்ளிட்ட படங்கள் படு தோல்வியை சந்தித்தன. ஒரு பெரிய வெற்றிக்காக காத்திருந்த வெங்கட் பிரபு சிம்புவுடன் இணைந்து உருவாக்கிய மாநாடு திரைப்படம் வெற்றி மாநாடாக மிகப்பெரிய சக்சஸை இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு கொடுத்துள்ளது.

அடல்ட் படம்
மாநாடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெங்கட் பிரபு ரஜினிகாந்தை இயக்குவாரா? என்கிற அளவுக்கு ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், அடல்ட் காமெடி படத்தை இயக்கப் போகிறார் என்கிற தகவல் கசிந்துள்ளது. ஏன் இந்த திடீர் மாற்றம் என சினிமா பிரபலங்களே சிலர் வெங்கட் பிரபுவிடம் கேட்டு வருகின்றனராம்.

ஹீரோ யார் தெரியுமா
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள அடல்ட் காமெடி படத்தில் ஹீரோவாக அசோக் செல்வன் நடிக்க உள்ளார் என்றும் ஸ்ம்ருதி வெங்கட் மற்றும் கோமாளி பட புகழ் சம்யுக்தா மேனன் என இரு ஹீரோயின்கள் இந்த படத்தில் நடிக்க உள்ளார்கள் என்றும் குறுகிய காலக்கட்டத்தில் இந்த படம் எடுத்து முடிக்கப்பட்டு அடுத்ததாக பெரிய நடிகர் படத்தை இயக்குவார் வெங்கட் பிரபு என தகவல்கள் வெளியாகி உள்ளன.

பார்ட்டி எப்போ
ஜெய், சிவா, சத்யராஜ், ரெஜினா கசாண்ட்ரா, நிவேதா பெத்துராஜ், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பல நடிகர்கள் நடிப்பில் உருவாகி பல ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் கிடக்கும் பார்ட்டி திரைப்படத்தையும் விரைவில் ரிலீஸ் செய்யும் முயற்சியில் இயக்குநர் வெங்கட் பிரபு ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











