விஷாலின் காயம் பற்றி விஜய் விசாரித்தாரா...இது என்னங்க புது தகவலாக இருக்கு?
சென்னை : தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் முக்கியமானவராக இருப்பவர் விஜய். இவர் தற்போது வம்சி பைடபள்ளி இயக்கும் வாரிசு படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
விஜய் பற்றிய தனிப்பட்ட விஷயங்களை விட, அவரின் படங்கள் பற்றிய தகவல்களே அதிகம் வெளிவந்து கொண்டிருக்கும். ஆனால் மிக அரிதாக வரும் விஜய் பற்றிய தகவல்களை அவரது ரசிகர்கள் வேற லெவலில் கொண்டாடுவார்கள்.
அப்படி தான் தற்போது ட்விட்டரில் #Varisu ஹேஷ் டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது. இதை பார்த்து விட்டு பலரும் வாரிசு படம் பற்றிய தகவல் தான் ஏதோ வெளியாகி உள்ளது போல, அதனால் தான் வாரிசு ஹேஷ்டேக் டிரெண்டாகிறது என ஆவலாக பார்க்க துவங்கினர்.

விஜய்க்கு பதிலா இவர் இருக்கார்
ஆனால் விஜய் போட்டோ, வீடியோவிற்கு பதிலாக நடிகை சுனைனாவின் வீடியோ அதிகம் பகிரப்பட்டு வந்ததால் அனைவரும் குழம்பிப் போயினர். பிறகு தான் தெரிகிறது, நடிகை சுனைனா விஜய் பற்றிய பேசி உள்ளார். அவர் சொன்ன விஷயத்திற்காக தான் இந்த வீடியோவை அதிகம் பகிர்ந்து டிரெண்டாக்கி வருகிறார்கள் என்று.

லத்தி டீசர் விழா
விஷால் - சுனைனா நடித்து செப்டம்பர் மாதம் ரிலீசாக உள்ள லத்தி படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய சுனைனா, இந்த விழாவிற்காக நான் விமானத்தில் வந்தேன். வழக்கமாக விமானத்தில் ஏறினாலே என் பைகள் போன்றவற்றை வைத்து விட்டு, இயர் போன் போட்டு விட்டு, தூங்க ஆரம்பித்து விடுவேன். அதே போல் இன்றும் நன்றாக தூங்கி விட்டேன்.

ஹாய் சொன்ன விஜய்
யாரோ என்னுடைய தோளில் கை வைத்து எழுப்பினார்கள். யாரென பார்த்தேன், பக்கத்தில் இருந்தவர் என்னிடம், அவர் உங்களை கூப்பிடுகிறார் என்றார். அவரா...யாரு என்னை கூப்பிடுகிறார்கள் என கேட்ட போது, விஜய் சார் என்றார். எனக்கு பயங்கர ஷாக். திரும்பி பார்த்தால், நான் அமர்ந்திருந்த அதே வரிசையில் அந்த பக்கத்தில் விஜய் அமர்ந்திருந்தார். நான் பார்த்ததும், மாஸ்க்கை இறக்கி விட்டு, ஹாய் என்றார்.

விஷால் பற்றி விசாரித்த விஜய்
உடனே நான் எழுந்து சென்று அவருக்கு பக்கத்தில் அமர்ந்தேன். அவர் என்னிடம், எதற்காக சென்னைக்கு போகிறீர்கள் என கேட்டார். லத்தி டீசர் வெளியீட்டு விழாவிற்காக போகிறேன் என்றேன். என்ன பேசுவது என தயார் செய்து விட்டீர்களா என கேட்டார். நான் இல்லை என்றதும், விஷால் எப்படி இருக்கிறார், அவரது காலில் பட்ட காயம் சரியாகி விட்டதா என கேட்டு விசாரித்தார்.

இதனால் தான் வீடியோ வைரலாச்சா
லத்தி டீசர் ரிலீஸ் பற்றி கேட்ட விஜய், ஓகே...இந்த விழாவை நான் யூட்யூப்பில் பார்த்துக் கொள்கிறேன் என்றார்.அவர் அப்படி பேசியதை கேட்டதும் எனக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. நிஜமாகவே இப்போது வரை என்ன பேசுவது என நான் முடிவு செய்யவில்லை. விஜய் சார் விசாரித்ததையே அனைவருடனும் பகிர்ந்து கொள்ளலாம் என வந்து விட்டேன் என்றார் சுனைனா.விஷால் பற்றி விஜய் விசாரித்தார் என்பதற்காக தான் இந்த வீடியோ வைரலாக்கப்பட்டு வருகிறது.

வாரிசு ஷுட்டிங் முடிஞ்சுடுச்சா
ஐதராபாத்தில் கடந்த சில நாட்களாக நடந்த வாரிசு பட ஷுட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட 3 வாரங்கள் வாரிசு பட ஷுட்டிங்கை முடித்த விஜய் 3 வாரங்களுக்கு பிறகு சென்னை திரும்பி உள்ளதாகவும், ஐதராபாத்தில் இருந்து சென்னை வரும் விமானத்தில் தான் நடிகை சுனைனா - விஜய் சந்திப்பு நடந்ததாகவும் சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











