TN அதிக வாக்குப்பதிவு நடக்க விஜய் காரணமா? மே. வங்கத்தில் 91 % வாக்குப்பதிவுக்கு காரணம்? விளாசும் நெட்டிசன்ஸ்
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 அமைதியாகவும் வெகு சிறப்பாகவும் நடைபெற்ற முடிந்தது. எஸ் ஐ யாருக்குப் பிறகு நடைபெற்ற தேர்தல் என்பதால் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு அளவைவிட இந்த ஆண்டு வாக்குப்பதிவு அதிகம் நடைபெற்றுள்ளது. இதற்கு காரணம் நடிகர் விஜய் மற்றும் அவரது அரசியல் வருகை தான் என்று பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இது தொடர்பாக இணையவாசிகள் பலரும் சில புள்ளிவிவரங்களுடன் விஜய் தான் காரணம் என்று சொல்லும் அவரது ரசிகர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பி வருகினறனர்.
அதாவது தமிழ்நாட்டில் மாலை 6 மணி நிலவரப்படி மொத்தம் 84.35 % பதிவாகியுள்ளது. இது கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலைக் காட்டிலும் சுமார் 10 முதல் 12 சதவீத வாக்குகள் அதிகம் பதிவாகி உள்ளது.
இப்படி இருக்கையில், தமிழ்நாட்டில் இம்முறை அதிகம் வாக்கு பதிவாக காரணம் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை தான் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக விஜய் ரசிகர்கள், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலரும் பதிவிட்டு வந்தனர்.

இப்படி இருக்கையில், நெட்டிசன்கள் பலரும் இதற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். S.I.R நடைபெற்ற பிறகு, இறந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது, பலமுறை பதிவான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதுதான் வாக்கு சதவீதத்தை அதிகம் காட்ட முக்கிய காரணம் என்றும் தெரிவித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் 84.35 % சதவீத வாக்கு பதிவாக விஜய் காரணம் என்றால், மேற்கு வங்கத்தில் 91.35 % வாக்குப்பதிவு நடைபெறவும் விஜய் தான் காரணமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications