நெசமா? தலைவி படத்தில் இவர்தான் சோபன் பாபுவாமே?
ஐதராபாத்: ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையான தலைவி படத்தில் சோபன் பாபுவாக நடிக்க, அர்ஜூன் ரெட்டி ஹீரோவிடம் பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையை மூன்று இயக்குனர்கள் படமாக்கி வருகின்றனர். கவுதம் வாசுதேவ் மேனன், பிரசாத் முருகேசன் இணைந்து, குயின் என்ற வெப் சீரிசை இயக்கியுள்ளனர். இதில் ரம்யா கிருஷ்ணன், ஜெயலலிதாவாக நடிக்கிறார். விஜி சந்திரசேகர் சசிகலாவாக நடித்துள்ளார்.

நித்யா மேனன் நடிப்பில் பிரியதர்ஷினி இயக்கும் ஜெயலலிதா படத்துக்கு அயர்ன் லேடி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் விஜய், தலைவி என்ற பெயரில் ஜெயலலிதாவின் கதையை இயக்கி வருகிறார். இதில் கங்கனா ரனவத், ஜெயலலிதாவாக நடிக்கிறார். அரவிந்த் சாமி எம்ஜிஆராகவும் பிரகாஷ் ராஜ் கருணாநிதியாகவும் நடிக்கின்றனர். சசிகலாவாக பிரியாமணி நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது.
இந்நிலையில் தெலுங்கு நடிகர் சோபன் பாபுவாக நடிக்க, 'அர்ஜுன் ரெட்டி' ஹீரோ விஜய் தேவரகொண்டாவிடம் படக்குழு பேசியுள்ளதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பாகக் கூறப்படுகிறது. அதே போல என்.டி.ராமாராவ் கேரக்டரில் நடிக்க, அவரது மகனும் தெலுங்கு ஹீரோவுமான பாலகிருஷ்ணாவிடம் பேசியுள்ளனர். இந்தத் தகவலை படக்குழு உறுதிப்படுத்தவில்லை.


Click it and Unblock the Notifications











