அஜித்துக்கு 'வாலி' மாதிரி.. ஹீரோ, வில்லன் என 2 அவதாரம் எடுக்கும் விஜய்.. ஜனவரியில் ஷூட்டிங்!
சென்னை: விஜய் தனது அடுத்த படத்தில் இரண்டு கேரக்டர்களில் நடிக்கிறார் என்றும் அதில் ஒன்று வில்லன் என்று கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், மாஸ்டர் படத்தில் நடித்திருக்கிறார் விஜய். இதில் அவர் பேராசிரியராக நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் விஜய்யின் அட்டகாசமான லுக்குகள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன.

மாளவிகா மோகனன்
இந்தப் படத்தில் விஜய்-க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். மாளவிகா மோகனன்
ஹீரோயின். சாந்தனு, ஆண்ட்ரியா உள்பட பலர் நடித்துள்ளனர். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு
செய்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார். அவர் இசையில் பாடல்கள் ஹிட்டாகியுள்ளன.
இந்தப் படம் கடந்த ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆவதாக இருந்தது.

லாக்டவுன் காரணமாக
கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் ஆகவில்லை. லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டதால் தியேட்டர்கள் மூடப்பட்டன. இதனால் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த படம் ஓடிடி-யில் வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியாயின. அதை தயாரிப்பு தரப்பு மறுத்துள்ளது. தியேட்டர் எப்போது திறக்குமோ, அப்போது ரிலீஸ் ஆகும் என்று அறிவித்துள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ்
இந்தப் படத்துக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார், விஜய். அதற்கான
கதை விவாதம் பரபரப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ்
தயாரிப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே இந்தப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

அஜித்துக்கு 'வாலி'
அதில் ஒரு கேரக்டர் வில்லன். நடிகர் அஜித்துக்கு, எஸ்.ஜே.சூர்யா இயக்கிய வாலி படம் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்தப் படத்தில் ஒரு கேரக்டரில் அஜித் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருப்பார். அதை போல வலுவான ஒரு நெகட்டிவ் கேரக்டரை நடிகர் விஜய்க்காக படக்குழு உருவாக்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜனவரியில் ஷூட்டிங்
இந்தப் படத்துக்கான கதை விவாதம், முருகதாஸ் தலைமையில் பரபரப்பாக நடந்து வருகிறது. ஜனவரி மாதம் இதன் ஷூட்டிங் தொடங்க இருப்பதாகவும் அதற்காக படக்குழு தீவிரமாகப் பணியாற்றி வருவதாகவும் சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











