நண்பர் அஜித் வழியை டைட்டிலிலும் ஃபாலோ பண்ண போகிறாரா விஜய்? தளபதி 66 டைட்டில் உண்மையில் இதுதானா?
சென்னை: இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் தளபதி 66 படத்த்ன் டைட்டில் லாக் ஆகி விட்டதாகவும், இதுதான் டைட்டில் என்றும் சில தகவல்கள் கசிந்துள்ளன.
நெல்சன் இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பீஸ்ட் திரைப்படம் வெளியான பிறகு ட்ரோல் மெட்டீரியலாக மாறி விட்டது.
தளபதி 66 படத்திற்கான எதிர்பார்ப்புகளை விட லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்து விஜய் நடிக்க போகும் தளபதி 67 படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சம்பவம் பண்ண போகும் வம்சி
ஆனால், எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் உருவாகும் தளபதி 66 படத்தின் மூலம் இயக்குநர் வம்சி தரமான சம்பவம் பண்ண போகிறார் என்றும் நடிகர் விஜய்யின் தீவிரமான ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

லீக் ஆகும் புகைப்படங்கள்
ஹைதராபாத்தில் ஷூட்டிங் நடைபெற்றாலும், நடிகர் விஜய்யின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக கசிந்து விடுகின்றன. சமீபத்தில் ஒரு பூந்தோட்டம் போன்ற செட்டில் விஜய் மற்றும் ராஷ்மிகா நடித்த காட்சிகள் லீக் ஆகி இருந்தன. இதனை தடுக்க படக்குழுவினர் தற்போது தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், சில காட்சிகளை மீண்டும் படமாக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அஜித்தை ஃபாலோ பண்றாரா
தற்போது கசிந்துள்ள டைட்டிலை பார்த்தால், கடந்த சில ஆண்டுகளாக நடிகர் அஜித் விடாப்பிடியாக எந்த எழுத்தில் படங்களை கொடுத்து வருகிறாரோ அதே எழுத்தில் தான் இந்த படத்தின் டைட்டிலும் ஆரம்பிக்கிறது என்பது தெரிகிறது. வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம், வலிமை என V டைட்டிலை நடிகர் அஜித் பயன்படுத்தி வரும் நிலையில், விஜய்யின் தளபதி 66 படத்தின் டைட்டிலும் V எழுத்தில் ஆரம்பிப்பதாக கூறுகின்றனர்.

என்ன டைட்டில்
இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 66 படத்திற்கு ‘வாரிசு' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். ஏற்கனவே நெப்போடிசம் பிரச்சனை சினிமா துறையை ஆட்கொண்டு வரும் நிலையில், இப்படியொரு டைட்டில் வைக்கப்படுமேயானால் இந்த படமும் நெப்போடிசத்தை மையப்படுத்தியதாக இருக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், ஜூன் 22ம் தேதி விஜய்யின் பிறந்தநாளில் அதிகாரப்பூர்வ டைட்டில் வெளியாகும் வரை சற்றே பொறுமையுடன் காத்திருப்போம்.
Recommended Video

விஜய் பெயரிலேயே
மேலும், நடிகர் அஜித்தின் V டைட்டில் சென்டிமென்ட்டை விஜய் ஃபாலோ பண்ணுகிறார், காப்பி அடிக்கிறார் என அஜித் ரசிகர்கள் ட்ரோல் செய்து வரும் நிலையில், நடிகர் விஜய்யின் பெயரிலேயே ‘வி' எழுத்து உள்ளதால் இப்படி ட்ரோல் செய்வதில் எந்தவொரு பயனும் இல்லை என விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். வரும் ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்தநாளுக்கு தளபதி 66 படத்தின் அறிவிப்பு மட்டுமே வெளியாக போகிறதா? அல்லது தளபதி 67 அறிவிப்பும் வெளியாகுமா? என விஜய் ரசிகர்கள் பலத்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











