மொத்தமும் காப்பி.. கடைசியில் விஜய் இப்படி பண்ணுவாருன்னு நினைக்கலை.. சர்ச்சையாகும் வீடியோ!

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சொன்ன குட்டி கதை காப்பியடிக்கப்பட்ட ஒன்று என்று சர்ச்சை எழுந்துள்ளது.

Recommended Video

நடிகர் விஜய் சொன்ன குட்டி கதை காப்பியடிக்கப்பட்ட ஒன்று..வைரலாகும் வீடியோ

சென்னை: பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சொன்ன குட்டி கதை காப்பியடிக்கப்பட்ட ஒன்று என்று சர்ச்சை எழுந்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. சென்னை சாய்ராம் கல்லூரியில் உள்ள லியோ முத்து உள் அரங்கில் இந்த விழா நடந்தது

நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன் டிவியில் ஒளிபரப்பானது.

எப்படி

எப்படி

இந்த விழாவில் விஜய் பேசிய விஷயங்கள், அரசியல் கருத்துக்கள் எல்லாம் பெரிய வைரலானது. இந்த விழாவில் நடிகர் விஜய் குட்டி கதை ஒன்றை கூறினார். அதில் யாரை எந்த இடத்தில் உட்கார வைக்க வேண்டுமோ அந்த இடத்தில் உட்கார வைக்க வேண்டும். ஒரு பூக்கடையில் வேலை பார்த்த சிறுவனை வெடி கடையில் அமர வைக்க கூடாது. அப்படி வைத்தால் அது சிக்கலாகும்.

என்ன இடம் வேண்டும்

என்ன இடம் வேண்டும்

அந்த சிறுவன் பூக்கடையில் வேலை பார்த்த பழக்க தோஷத்தில் வெடி மீது 5 நிமிடத்திற்கு ஒரு முறை தண்ணீர் தெளிப்பான். இதனால் அங்கு வியாபாரமே ஓடாது. அதனால் யாருக்கு எந்த இடத்தை கொடுக்க வேண்டுமோ, அந்த இடத்தை கொடுக்க வேண்டும், என்று நடிகர் விஜய் தமிழக அரசியலை விமர்சித்து பேசினார்.

மோசம்

மோசம்

இந்த நிலையில் நடிகர் விஜயின் இந்த பேச்சு காப்பியடிக்கப்பட்டது என்று புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே பிரபல பெண் மேடை பேச்சாளர் ஒருவர் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. இரண்டிலும் ஒரே கதையை இரண்டு பேரும் சொல்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.

காப்பி அடித்தார்!

அந்த பெண் பேசியது பழைய நிகழ்ச்சி ஆகும். அதேபோல் அவர் சொல்லும் ''இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து'' என்று திருக்குறளை விஜயும் தனது பேச்சில் குறிப்பிட்டு உள்ளார். அவர் பேசியதைதான் விஜய் மாற்றி பேசி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையம் முழுக்க வெளியாகி வைரலாகி வருகிறது.

என்ன சிக்கல்

என்ன சிக்கல்

ஏற்கனவே இயக்குனர் அட்லி மீது அவ்வப்போது கதை காப்பியடிப்பதாக புகார் எழுவது உண்டு. பிரபல படங்களின் கதைகளை கொஞ்சமாக மாற்றி படம் எடுக்கிறார் என்று புகார் வருவதுண்டு. தற்போது நடிகர் விஜயின் பேச்சும் அதேபோல் சர்ச்சையில் சிக்கி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X