பிகில்.. விஜய் காப்பி அடித்து பேசினாரா? சர்ச்சை பற்றி பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பரபரப்பு விளக்கம்!
பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சொன்ன குட்டி கதை காப்பியடிக்கப்பட்ட கதையா என்ற சர்ச்சை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
Recommended Video
சென்னை: பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சொன்ன குட்டி கதை காப்பியடிக்கப்பட்ட கதையா என்ற சர்ச்சை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. சென்னை சாய்ராம் கல்லூரியில் உள்ள லியோ முத்து உள் அரங்கில் இந்த விழா நடந்தது நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய் நிறைய அரசியல் கருத்துக்களை கூறினார். முக்கியமாக அவர் சொன்ன குட்டி கதை பெரிய வைரலானது.

என்ன சர்ச்சை
நடிகர் விஜய் தனது பேச்சில், யாரை எந்த இடத்தில் உட்கார வைக்க வேண்டுமோ அந்த இடத்தில் உட்கார வைக்க வேண்டும். ஒரு பூக்கடையில் வேலை பார்த்த சிறுவனை வெடி கடையில் அமர வைக்க கூடாது. அப்படி வைத்தால் அது சிக்கலாகும். அந்த சிறுவன் பூக்கடையில் வேலை பார்த்த பழக்க தோஷத்தில் வெடி மீது 5 நிமிடத்திற்கு ஒரு முறை தண்ணீர் தெளிப்பான்.

அட
இதனால் அங்கு வியாபாரமே ஓடாது. அதனால் யாருக்கு எந்த இடத்தை கொடுக்க வேண்டுமோ, அந்த இடத்தை கொடுக்க வேண்டும், என்றார். இந்த நிலையில் நடிகர் விஜயின் இந்த பேச்சு காப்பியடிக்கப்பட்டது என்று புகார் எழுந்தது. ஏற்கனவே பிரபல பட்டிமன்ற பேச்சாளர் கவிதா ஜவஹர் பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி பெரிய சர்ச்சையானது.

என்ன விளக்கம்
இந்த இரண்டு பேச்சும் ஒரே மாதிரி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் விஜயின் பேச்சு குறித்து, அந்த பட்டிமன்ற பேச்சாளர் கவிதா ஜவஹர் தற்போது விளக்கம் அளித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் இது தொடர்பாக பேட்டி அளித்துள்ளார். அதில், அந்த விழாவில் விஜய் முதலில் சொன்னது திருக்குறள். அதை காப்பி என்று யாரும் சொல்ல முடியாது.

குட்டி கதை
அதன்பின் அவர் ஒரு குட்டி கதை சொன்னார். அதை நான் பல மேடைகளில் சொல்லி இருக்கிறேன். நான் மட்டுமல்ல பல பட்டிமன்ற பேச்சாளர்கள் இதை சொல்லி இருக்கிறார்கள். இந்த கதை பல காலமாக மக்கள் மத்தியில் சுற்றி வருகிறது. அதனால் விஜய் வேறு எங்காவது அதை கேட்டு இருக்கலாம்.

செம காப்பி
இதை காப்பி என்று சொல்ல முடியாது. ஆனால் பேச்சு ஒரே மாதிரி அமைந்தது தற்செயலான விஷயம்தான். நான் தீவிரமான விஜய் ரசிகை. தற்போது அவரின் பேச்சுக்கும் ரசிகை ஆகிவிட்டேன். எனக்கு இது சந்தோசம்தான். விஜய் மிகவும் அழகாக பேசி இருந்தார். மிக அழகாக அவர் கருத்துக்களை கோர்வையாக குறிப்பிட்டு இருந்தார், என்று அவர் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











