Don't Miss!
- News
துரோகம், பதவி வெறி, சுயநலம்.. எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. டிடிவி தினகரன்!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Technology
விஷத்தை வெளியேற்றுகிறதா வாட்டர் ஹீட்டர்கள்? பகீர் நிகழ்வால் மக்கள் பீதி.! உண்மை என்ன?
- Lifestyle
உங்க மார்பகங்களில் இந்த அறிகுறிகள் இருந்தா? அது மார்பக புற்றுநோயா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
வெளியானது தளபதி 66 ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்...எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே ?
சென்னை : விஜய்யின் தளபதி 66 படத்தின் போஸ்டர் டைட்டிலுடன் இன்று வெளியிடப்பட்டுள்ளது. விஜய்யின் பிறந்தநாள் ட்ரீட்டாக அவரது ரசிகர்களுக்கு படக்குழு இதை வழங்கி உள்ளது.
Recommended Video
விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ஜுன் 21 ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என இரண்டு நாட்களுக்கு முன் புதிய போஸ்டருடன் படக்குழு அறிவித்தது.
தளபதி 66 படத்தில் நடிக்கும் சில நடிகர்களும் He is returning என்ற வாசகத்துடன் இந்த தகவலை பகிர்ந்தனர். இதனால் ரசிகர்களும் He is returning என குறிப்பிட்டு தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்தனர்.
வெறித்தனத்தில்
விஜய்
ரசிகர்கள்..
வெளியான
20
நிமிடங்களில்
லட்சம்
லைக்ஸ்களை
பெற்ற
வாரிசு
பர்ஸ்ட்
லுக்!

ஸ்டையிலான தளபதி 66 ஃபர்ஸ்ட்லுக்
அறிவித்த படி இன்று மாலை சரியாக 6 மணிக்கு தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இதில் ட்ரிம் செய்யப்பட்ட தாடி, செம ஸ்டையிலாக கோட் ஷுட் அணிந்து விஜய் அமர்ந்திருப்பது போன்று இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் அமைக்கப்பட்டிருந்தது.

தளபதி 66 டைட்டில் வாரிசு
அதோடு தளபதி 66 படத்திற்கு வாரிசு தி பாஸ் ரிட்டர்ன்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரையும், டைட்டிலையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தளபதி 66 படம் குடும்ப சென்டிமென்ட் படம் என்பதால் இப்படி ஒரு டைட்டிலை வைத்துள்ளார்கள் என பலரும் கூறி வருகிறார்கள்.

லைக்குகளை அள்ளிய போஸ்டர்
தளபதி 66 படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்ட 20 நிமிடங்களிலேயே 20 லட்சம் லைக்குகள் குவிந்துள்ளன. நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய்யை பக்காவான ஸ்மாட்லுக்கில் பார்த்ததால் ரசிகர்கள் செம குஷியாகி விட்டனர். தளபதி 66 ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது செம டிரெண்டாகி உள்ளது. அதோடு விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே
ஆனால் இந்த போஸ்டரின் பேக்கிரவுண்ட், பல அடுக்கு மாடியில் விஜய் அமர்ந்திருப்பது போன்றும், வெள்ளை நிறம் கலர்ந்ததாக அமைக்கப்படடுள்ளது. இந்த பேக்கிரவுண்ட், விஜய் அணிந்திருக்கும் கோட் ஷுட் ஆகியவற்றை பார்த்தால் கபாலி படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை நினைவுபடுத்துவதாக உள்ளது.

அட...ஆமாங்க...இதே தான்
கபாலி படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரிலும் இதே போல் ஒரு பேக்கிரவுண்ட், பல அடுக்கு மாடி கட்டிடத்தில், வேறு எந்த பொருளும் இல்லாத ஒரு அறையில் பெரிய சோஃபாவில் ரஜினி கால் மேல் கால் போட்டு ஸ்டையிலாக அமர்ந்திருப்பார். படத்தின் கதை மலேசியாவில் நடப்பதாக காட்டப்படுவதால் ட்வின் டவர்சும் தூரத்தில் தெரிவதாக இருக்கும்.

ரஜினி ஸ்டைலில் டைட்டில்
படத்தின் டைட்டில் ரஜினி பட ஸ்டைலில் The Boss என்ற வார்த்தையை பயன்படுத்தி இருந்தார்கள். டைட்டிலில் மட்டுமல்ல போஸ்டரும் ரஜினி பட ஃபர்ஸ்ட்லுக்கை நினைவுபடுத்துவதாக அமைக்கப்பட்டுள்ளதால், அடுத்த ரஜினி ஆக முயற்சி செய்கிறாரா விஜய் என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

போஸ்டரிலேயே ஆரம்பிச்சுடீங்களா
விஜய்யின் முந்தைய படமான பீஸ்ட் படத்தின் டீசர், டிரைலர் தான் காப்பி, மிக்சிங் என பல விதமான விமர்சனங்களை பெற்றது என்று பார்த்தால், தளபதி 66 படத்திற்கு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே விமர்சனங்களையும், சந்தேகங்களையும் கிளப்ப துவங்கி விட்டனர். ஆனாலும் இந்த போஸ்டரை முதலில் பார்க்கும் அனைவருக்கும் கபாலி படம் மனதில் வந்து போகிறது என்றே பெரும்பாலானோர் கமெண்ட் செய்து வருகின்றனர்.