twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தீவிர அரசியலுக்கு தயாராகும் விஜய்...அடுத்தடுத்த ரகசிய பிளான்கள் ரெடி

    |

    சென்னை : நடிகர் விஜய் அரசிலுக்கு வர போகிறார், தனிக்கட்சி துவக்க போகிறார் என கடந்த சில ஆண்டுகளாகவே கோலிவுட்டிலும் சரி, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது பற்றி விஜய் நேரடியாக எதையும் சொல்லவில்லை.

    ஆனால் விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பு துவங்கப்பட்டு, விஜய்யின் தந்தையும் பிரபல தயாரிப்பாளருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையில் நடத்தப்பட்டு வந்தது. இதன் காரணமாகவே விஜய்க்கும் அவரது தந்தைக்கும் பல பிரச்சனைகள் வந்ததாக பேசப்பட்டது.

    சமீபத்தில் விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்படுவதாக சொன்னார்கள். தனது பெயரை தனிப்பட்ட ஆதாயத்திற்காக பயன்படுத்துவதாக விஜய், தனது அம்மா சோபா உள்ளிட்ட சிலர் மீது புகார் அளித்தார். பிறகு எஸ்ஏசி தலைமையிலான விஜய் மக்கள் இயக்கம் தான் கலைக்கப்பட்டது. தனது தலைமையிலான இயக்கம் கலைக்கப்படவில்லை என விஜய் அறிக்கை வெளியிட்டார்.

    நடிகர் தனுஷின் அடுத்த மூவ் என்ன? உண்மையிலேயே ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிய இதுதான் காரணமா?நடிகர் தனுஷின் அடுத்த மூவ் என்ன? உண்மையிலேயே ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிய இதுதான் காரணமா?

    உள்ளாட்சிகளை கைப்பற்றிய விஜய் கட்சி

    உள்ளாட்சிகளை கைப்பற்றிய விஜய் கட்சி

    இந்த பிரச்சனை ஒரு புறம் ஓடிக்கொண்டிருக்க சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டியிட்டது. மொத்தம் 169 பேர் போட்டியிட்டதில் 110 பேர் வெற்றி பெற்று பல உள்ளாட்சிகளில் பல பதவிகளை பெற்றனர். இந்த விஷயம் விஜய் ரசிகர்களுக்கும், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கும் உற்சாகத்தை கொடுத்தது.

    விஜய் கொடுத்த அட்வைஸ்

    விஜய் கொடுத்த அட்வைஸ்

    உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களை சென்னைக்கு அழைத்து குரூப் போட்டோ எடுத்து, சில அட்வைஸ் வழங்கி விஜய் அனுப்பி வைத்தார். மக்களுக்கு சேவை செய்யும்படி விஜய் கேட்டுக் கொண்டார். சத்தமில்லாமல் களமிறங்கி உள்ளாட்சியில் 100 க்கும் அதிகமான இடங்களை விஜய்யின் கட்சி பிடித்ததை அனைவரையும் ஆச்சரியப்படவும், மற்ற கட்சிகளை அதிர்ச்சி அடையவும் வைத்தது.

    அடுத்த பிளான் இது தானா

    அடுத்த பிளான் இது தானா

    இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் கிடைத்த வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, அடுத்த கட்டமாக விரைவில் நடக்க உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிட விஜய்யின் மக்கள் இயக்கம் முடிவு செய்திருக்கிறதாம். விருப்பம் உள்ளவர்கள் தாராளமாக களமிறங்கலாம். தலைமை உதவும். இயக்கத்தின் பெயரையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என உறுப்பினர்களுக்கு சொல்லப்பட்டுள்ளதாம்.

    க்ரீன் சிக்னல் காட்டிய விஜய்

    க்ரீன் சிக்னல் காட்டிய விஜய்

    நகராட்சிகளில் சேர்மன், மாநகராட்சிகளில் மேயர் உள்ளிட்ட பல பதவிகளுக்கும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் போட்டியிடுவதற்கு விஜய் கிரீன் சிக்னல் காட்டி விட்டாராம். விஜய் தீவிர அரசியலில் இறங்குவதற்காக தான் பலமாக அடித்தளம் அமைத்து வருவதாக கூறப்படுகிறது. உள்ளாட்சிகளில் பலமான இடங்களைப் பிடித்து படிப்படியாக மக்களிடம் தங்களின் செல்வாக்கை உயர்த்த திட்டமிட்டுள்ளதாம் விஜய் மக்கள் இயக்கம்.

    Recommended Video

    Bigg Boss போட்டியாளருக்கு Kamal Hassan கொடுத்த GIFTS -ன் காரணம்
    விஜய்யின் மாஸ்டர் பிளான்

    விஜய்யின் மாஸ்டர் பிளான்

    அடுத்த சட்டசபை தேர்தலுக்குள் தமிழகம் முழுவதும் பலமான அமைப்பாக வளர்ந்து விட வேண்டும் என திட்டமிட்டுள்ளார்களாம். அதற்கு முன் வரும் லோக்சபா தேர்தலிலும் போட்டியிட திட்டம் வகுத்து வருகிறார்களாம். சட்டசபை தேர்தலுக்கு இப்போதே தயாராக விஜய் ரகசியமாக காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தலை போல், நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் கணிசமான இடங்களை பிடித்து விட்டால் அடுத்தடுத்த திட்டங்களை அமல்படுத்துவது தான் விஜய்யின் திட்டம் என கூறப்படுகிறது.

    English summary
    According to some sources said that Vijay has planned to enter in politics. After the success of rural local body election, vijay's party is planning to contest urban local body election too. Vijay has secretly designed a blueprint for his mass political entry.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X