»   »  இந்த போட்டோவில் பெண் வேடத்தில் இருக்கும் ஹீரோ யார் என தெரிகிறதா?

இந்த போட்டோவில் பெண் வேடத்தில் இருக்கும் ஹீரோ யார் என தெரிகிறதா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தியாகராஜன் குமாரராஜா இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி பெண் வேடம் போடுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

விஜய் சேதுபதி ஆரண்ய காண்டம் படம் புகழ் தியாகராஜன் குமாரராஜாவின் இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத அந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார்.

Is Vijay Sethupathi doing what Sivakarthikeyan did?

இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் விஜய் சேதுபதி சேலை அணிந்து விக் வைத்து பெண் வேடத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.

படத்தில் விஜய் சேதுபதி பெண்ணாக நடிக்கிறாரா இல்லை மூன்றாம் பாலினத்தவராக நடிக்கிறாரா இல்லை சிவகார்த்திகேயன் போன்று சிறிது நேரம் பெண் வேடத்தில் வருகிறாரா என தெரியவில்லை.

இது குறித்து இயக்குனர் தான் விளக்கம் அளிக்க வேண்டும். அதுவரை பொறுமையாக காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை.

    English summary
    A picture of Vijay Sethupathi in lady get up taken from the sets of his upcoming movie being directed by Thiagarajan Kumararaja is doing rounds on social media.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil