'கே.ஜி.எஃப்' இயக்குனரின் 'சலார்' படத்தில் .. பிரபாஸூக்கு வில்லன் ஆகிறார், நடிகர் விஜய் சேதுபதி?

By

சென்னை: 'சலார்' படத்தில் பிரபாஸூக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

கன்னடத்தில் உருவான, 'கே.ஜி.எஃப்' படம் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மொழிகளில் கடந்த 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.

அனைத்து மொழிகளிலும் இந்தப் படம் வரவேற்பை பெற்றதை அடுத்து, இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

ஶ்ரீனிதி ஷெட்டி

ஶ்ரீனிதி ஷெட்டி

முதல் பாகத்தை இயக்கிய பிரசாந்த் நீல், 'கே.ஜி.எஃப்: சாப்டர் 2 என்ற இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். முதல் பாகத்தில் நடித்த யஷ், ஶ்ரீனிதி ஷெட்டி ஆனந்த் நாக், மாளவிகா அவினாஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தி நடிகர் சஞ்சய் தத், அதீரா என்ற கேரக்டரில் வில்லனாக நடிக்கிறார். ரவீனா டாண்டன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இறுதிக்கட்ட படப்பிடிப்பு

இறுதிக்கட்ட படப்பிடிப்பு

இந்த வருடத்தின் அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கும் இந்தப் படத்தை கொரோனா காரணமாக திட்டமிட்டபடி முடிக்க முடியவில்லை. கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு இதன் ஷூட்டிங், கடந்த அக்டோபர் மாதம் மீண்டும் தொடங்கியது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கிறது.

சாதனைப் படைத்தது

சாதனைப் படைத்தது

இதற்கிடையே, இந்த படத்தின் டீசர், ஹீரோ யஷ் பிறந்த நாளான கடந்த 8 ஆம் தேதி வெளியாகி, வரவேற்பை பெற்றுள்ளது. இந்த டீசர், வெளியான 76 நிமிடங்களில், யூடியூப்பில் ஒரு மில்லியன் பார்வைகளை கடந்து சாதனைப் படைத்தது.

ஹொம்பாளே பிலிம்ஸ்

ஹொம்பாளே பிலிம்ஸ்

இந்தப் படத்தை அடுத்து பிரசாந்த் நீல், பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் சலார் என்ற படத்தை இயக்குகிறார். இதன் தொடக்க விழா சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்தது. மெகா பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை, கே.ஜி.எஃப் பட தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாளே பிலிம்ஸ் தயாரிக்கிறது.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

இந்தப் படத்தில் பிரபல இந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இப்போது விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியில் சில படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கும் நடிகர் விஜய் சேதுபதி, இந்தப் படத்திலும் வில்லனாக நடிக்க இருக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X