வித்தியாச காதல் கதையாம்! இந்த தெலுங்கு பட ரீமேக் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறாரா விஜய் மகன் சஞ்சய்?
சென்னை: தெலுங்கு படம் ஒன்றின் ரீமேக் மூலம் நடிகர் விஜய் மகன் சஞ்சய் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
Recommended Video
பிரபல நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய். இவர் சினிமா தொடர்பான படிப்புக்காக கனடா சென்றுள்ளார்.
அங்கு அவர் படித்து வருகிறார். இதற்கிடையே, கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவியது.

ஊரடங்கு
இத்தாலி, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கொரோனா வைரஸ் காரணமாக கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. அங்கு ஏராளமானோர் தினமும் உயிரிழக்கின்றனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல நாடுகள் ஊரடங்கை பிறப்பித்துள்ளன.

நடிகர் விஜய்
சர்வதேச விமான போக்குவரத்துகள் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளன. இதனால் வெளிநாட்டில் சிக்கியுள்ள பலர், தங்கள் சொந்த நாட்டுக்கு வரமுடியாமல் தவித்து வருகின்றனர். படிப்புக்காக வெளிநாடு சென்றவர்களும் தங்கியிருக்கும் இடங்களிலேயே பாதுகாப்பாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய், தனது மகன் குறித்து கவலை அடைந்ததாக செய்திகள் வெளியாயின.

ஹீரோவாகிறார் சஞ்சய்
இதை விஜய் தரப்பில் மறுத்திருந்தனர். சஞ்சய், பாதுகாப்பாக இருக்கிறார் என்றும் நடிகர் விஜய், அவரிடம் தினமும் போனில் பேசி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் விஜய் மகன் சஞ்சய் ஹீரோவாக நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. தெலுங்கில் உருவாகி வரும் படம், உப்பெனா. இதை புச்சிபாபு சனா இயக்குகிறார்.

கொரோனா காரணமாக
இதில், பஞ்சா வைஷ்ணவ் தேஜ் ஹீரோவாக அறிமுகமாகிறார். கீர்த்தி ஷெட்டி ஹீரோயின். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். ஹீரோயினுக்கு தந்தையாக அவர் நடிப்பதாகக் கூறப்படுகிறது. தேவிஶ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம், ஏப்ரல் 2 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்தது. கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ரீமேக் உரிமை
இந்தப் படத்தின் ரிலீஸுக்கு முன்பே, தமிழ் ரீமேக் உரிமை விற்கப்பட்டு விட்டதாகவும் விஜய் சேதுபதி அதை வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர், நடிகர் விஜய்யிடம் அவர் மகன் சஞ்சய்க்காக இந்தப் படத்தின் கதைப் பற்றி சொன்னதாகவும் அதற்கு அவர் ஓகே சொன்னதாகவும் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்தப் படம் அடுத்த வருட ஆரம்பத்தில் தொடங்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











