என்னங்க சொல்றீங்க...தளபதி 66 ல் இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவாக நடிக்கிறாரா விஜய்?

சென்னை : தளபதி 66 படத்தில் விஜய் இரண்டு குழந்தைகளுக்கு அப்பா ரோலில் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தளபதி 66 படம் பற்றி வெளியாகும் தகவல்களை வைத்து படத்தின் கதை என்னவென்று கணிக்க முடியாமல் ரசிகர்கள் குழம்பிப் போய் உள்ளனர்.

வம்சி பைடபள்ளி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார் விஜய். ஐதராபாத்தில் ஏப்ரல் மாதம் துவங்கி நடைபெற்று வந்த நிலையில் மே 26 ம் தேதி ஐதராபாத்தில் நடைபெற்று வந்த ஷுட்டிங் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அடுத்த கட்ட ஷுட்டிங் விரைவில் சென்னையில் துவங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவா

இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவா

இந்நிலையில் மற்றொரு புதிய அப்டேட்டாக தளபதி 66 படத்தில் விஜய், இரண்டு குழந்தைகளுக்கு அப்பா ரோலில் நடிக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பென்குயின் படத்தில் கீர்த்தி சுரேஷிற்கு மகனாக நடித்த அத்வைத் வினோத் மற்றும் பீஸ்ட் படத்தில் சிறிய ரோலில் நடித்த ஹர்சிதா கார்த்திக் ஆகியோர் விஜயக்கு பிள்ளைகளாக நடிக்கிறார்களாம். இந்த தகவலை போட்டோவுடன் வம்சி பைடபள்ளியே உறுதி செய்துள்ளார்.

மிகப் பெரிய கெளரவம்

மிகப் பெரிய கெளரவம்

இதற்கிடையில் தளபதி 66 படத்தில் விஜய் மற்றும் வம்சி பைடபள்ளியுடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்கள் பற்றி தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தைகள் இருவரும் பகிர்ந்துள்ளனர். விஜய்யுடன் நடிப்பதற்காக ஆவலாக காத்திருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அத்வைத் தனது பதிவில், வம்சி பைடபள்ளி அங்கிளுடன் தளபதி 66 படத்தில் நடிப்பதை மிகப் பெரிய கெளரவமாக நினைக்கிறேன். முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது. இரண்டாம் கட்ட ஷுட்டிங்கிற்காக ஆவலாக காத்திருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

25 நாள் ஷுட்டிங் நடந்ததா

25 நாள் ஷுட்டிங் நடந்ததா

ஹர்சிதாவும் இதே போல், வம்சி அங்கிளுடன் பணியாற்றுவதை மிகப் பெரிய கெளரவமாக நினைக்கிறேன். இந்த அற்புதமான வாய்ப்பை கொடுத்ததற்காக அவருக்கு நன்றி. இது மிகச் சிறந்த அனுபவம் எனக்கு என குறிப்பிட்டுள்ளார். சென்னையில் இதற்கு முன் 25 நாட்கள் தளபதி 66 படத்தின் ஷுட்டிங்கை நடத்தினார்களாம். அதற்கு பிறகு தான் ஐதராபாத் சென்றுள்ளனர்.

 இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா விஜய்

இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா விஜய்

குடும்ப படமாக உருவாக்கப்படும் தளபதி 66 படத்தில் விஜய் இரட்டை ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதில் ஒரு விஜய்க்கு பிள்ளைகளாக தான் இவர்கள் இருவரும் நடிக்கிறார்களாம். 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சரத்குமார், ஜெயசுதா, பிரகாஷ்ராஜ், பிரபு, யோகிபாபு, சங்கீதா கிருஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தில் ஹீரோயின்களாக ராஷ்மிகா மந்தனாவும், மெஹ்ரின் பிர்சோடாவும் நடிக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X