தலைவர் 169.. ரஜினிக்காக விஜய் செய்யப் போகும் சூப்பர் விஷயம்.. என்னன்னு தெரியுமா?

சென்னை: தலைவர் 169 படத்தின் அறிவிப்பு வந்ததில் இருந்தே ரஜினிகாந்த் மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அண்ணன் தம்பிகளாக மாறி விட்டனர்.

முன்னதாக இருவரும் முட்டி மோதிக் கொண்டிருந்த நிலையில், இயக்குநர் நெல்சனுக்கு ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது தான் இந்த திடீர் மாற்றத்துக்கு காரணம்.

இந்நிலையில், தலைவர் 169 படத்தில் நடிகர் விஜய் ரஜினிக்காக ஒரு சூப்பரான விஷயத்தை செய்யப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ஏகப்பட்ட இயக்குநர்கள்

ஏகப்பட்ட இயக்குநர்கள்

தேசிங் பெரியசாமி, பாண்டிராஜ், கார்த்திக் சுப்புராஜ், பால்கி, வெற்றிமாறன் என ஏகப்பட்ட பெயர்கள் தலைவர் 169 படத்தை இயக்கும் பட்டியலில் வலம் வந்த நிலையில், தயாரிப்பு தரப்பும் மாறப்போவதாக தகவல்கள் பரவ தொடங்கியதும் சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக இயக்குநர் நெல்சன் தான் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்கப் போகிறார் என அறிவித்து விட்டனர்.

அட்டகாசமான புரமோ

அட்டகாசமான புரமோ

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விரைவில் வெளியாக உள்ள எதற்கும் துணிந்தவன் மற்றும் பீஸ்ட் புரமோக்களை எல்லாம் ஓரங்கட்டும் அளவுக்கு தலைவர் 169 புரமோ வெளியாகி இணையத்தை அதிர வைத்து வருகிறது. அதிலும் கண்ணாடியை சுழற்றியபடி ரஜினிகாந்த் ஹேண்ட்ஸம் லுக்கில் செம மாஸாக கொடுக்கும் என்ட்ரி ரிப்பீட் மோடில் பார்க்கப்பட்டு வருகிறது.

மச்சக்கார நெல்சன்

மச்சக்கார நெல்சன்

சிம்புவின் வேட்டை மன்னன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகலாம் என நினைத்த நெல்சனுக்கு அந்த படம் டிராப் ஆனதும் மிகப்பெரிய ஏமாற்றம் அடைந்தார். ஆனால், நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நிலையில், தொடர்ந்து சிவகார்த்திகேயனின் டாக்டர், விஜய்யின் பீஸ்ட் மற்றும் அடுத்ததாக தலைவர் 169 படங்களை இயக்கும் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

சிவகார்த்திகேயன் கேமியோ

சிவகார்த்திகேயன் கேமியோ

தலைவர் 169 படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் எழுதுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த முறை அவர் பாடல் எழுதுவதை விட கேமியோவாக ஸ்பெஷல் அப்பியரன்ஸ் கொடுக்கப் போகிறார் தலைவர் 169 படத்தில் என்கிற ஹாட் அப்டேட் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன. இந்நிலையில், அதை விட இன்னமும் ஒரு சூடான சூப்பரான அப்டேட் கிடைத்திருக்கிறது.

விஜய்யின் பங்கு

விஜய்யின் பங்கு

பீஸ்ட் படத்தை முடித்த கையோடு தலைவர் 169 படத்தை நெல்சன் இயக்க உள்ள நிலையில், அந்த படத்தில் ரஜினிக்காக ஒரு பாடலை நடிகர் விஜய் பாடப் போவதாக ரகசிய தகவல் ஒன்று கசிந்துள்ளது. சன் பிக்சர்ஸ் மற்றும் இயக்குநர் நெல்சன் அதற்கான பேச்சுவார்த்தையில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தில்லு முல்லு படத்திற்கு பிறகு வேற லெவல் காமெடியில் கலக்கப்போகும் ரஜினியை ரசிகர்கள் பார்த்து ரசிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும் என்கிற முனைப்புடன் மேலும், ஏகப்பட்ட எதிர்பாராத சர்ப்ரைஸ்களையும் தலைவர் 169 படத்தில் இணைக்க நெல்சன் திட்டமிட்டு வருகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X