கடைசி வரை வேலை செய்யவே மாட்டேன்னு சொல்லும் ராஜு.. கலாய்த்துத் தள்ளிய கமல்.. பிரியங்காவுக்காகவா?
சென்னை: இதுவரை பிரியங்காவை ரோஸ்ட் பண்ணும் காட்சிகள் இடம்பெற்று ராஜுவிற்கு ஓட்டுக்கள் அதிகமாகி வந்தன.
இந்நிலையில், தொடர்ந்து ராஜுவுக்கு எதிரான நெகட்டிவ் புரமோக்கள் வெளியாகி பிரியங்காவின் ஹைப்பை கூட்ட விஜய் டிவி முயற்சி செய்கிறதா? என்கிற சந்தேகம் மூன்றாவது புரமோவை பார்த்ததும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
நிரூப் ஃபைனல்ஸ் போன மாதிரி இறுதி வாரத்திலும் எதிர்பாராத திருப்பங்கள் இருக்குமா? என்றும் தோன்றுகிறது.

சம்பந்தமில்லாத காட்சி
இந்த வாரம் திடீரென தாமரை ராஜு வேலையே செய்ய மாட்டேன் என்கிறான் என்று சொல்லும் காட்சியும் அதற்கு பாவனி அவர் எப்போது தான் வேலை செய்தார் என்று சொல்வதும் பிரியங்கா மற்றும் பாவனி சேர்ந்து கொண்டு ராஜுவை நீ தான் செல்லம் கொடுத்து கெடுக்கிற என சொன்ன காட்சிகள் இடம்பெற்று இருந்தன.

கமல் கேள்வி
இந்நிலையில், இன்றைய மூன்றாவது புரமோவில் குறிப்பாக அந்த பஞ்சாயத்தை எடுத்துக் கொண்டு கமல் பேசி இருப்பதை காண்பித்துள்ளனர். இது திட்டமிட்டே ராஜுவுக்கு எதிராக விஜய் டிவி காய் நகர்த்தும் வேலை என ராஜுவின் ஆர்மியினர் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

ராஜுவுக்கு எதிராக
நிரூப் இரண்டாவது ஃபைனலிஸ்ட்டாக உள்ளே நுழைந்த டேர் டாஸ்க்கே ராஜுவுக்காக உருவாக்கப்பட்டது என ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன. மேலும், பிரியங்காவை பிக் பாஸ் வீட்டில் இருந்து ராஜு வெளியேற்றப் போவது போன்ற அன்சீன் காட்சியை மூன்றாவது புரமோவாக போட்டு ராஜுவின் வாக்குகளை குறைக்க பிக் பாஸ் எடிட்டர் பிசியாக வேலை பார்த்து வருவதாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

சிபி அட்வைஸ்
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சிபியும் நிரூப் மற்றும் ராஜுவுக்கு மட்டுமே அட்வைஸ் சொன்ன காட்சிகள் இடம்பெற்றன. ஆனால், பிரியங்காவுக்கும் உரைக்கும் படி சிபி சொன்னதை பிக் பாஸ் எடிட்டர் சாமர்த்தியமாக கட் செய்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கமல் ரோஸ்ட்
வார வாரம் பிரியங்காவை ரோஸ்ட் பண்ணி வந்த போது ஜாலியாக இருந்தது ஒருவேளையையும் செய்யாமல் மிக்சர் தின்றுக் கொண்டே ராஜு டைட்டில் வின் பண்ண வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கும் போது வீட்டு வேலை கூட ராஜு செய்வதில்லை என கமல் ரோஸ்ட் பண்ணுவது தவறாக தெரிகிறதா என பிரியங்கா மற்றும் பாவனி ஆர்மியினர் கேள்விகளால் துளைத்து எடுத்து வருகின்றனர்.

மூன்று மடங்கு சம்பளம்
பாத்திரம் சரியாக கழுவ வராது சார்.. அப்படியே கழுவினாலும் அங்கே சோப்பு ஒட்டியிருக்கு, இங்கே ஒட்டியிருக்கு என சொல்றாங்க அதனால் தான் செய்யவில்லை என்றும் வீட்டில் கூட ஒரு அக்காவை வேலைக்கு வைத்திருக்கிறோம். வெளியே போனதும் அவருக்கு மூன்று மடங்கு சம்பளத்தை உயர்த்தி தருவேன் என ராஜு சொன்னதை கேட்டதும் 50 லட்சம் வரப் போகிறது என்கிற ஆணவத்தில் பேசுகிறார் என நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

இன்ஸ்டாவில் போடுறேன்
மீண்டும் கமல் வெளியே போயும் வேலை செய்ய மாட்டேன்னு சொல்றாரு என குட்டு வைக்க வீட்டில் தினமும் கூட்டிப் பெருக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் போடுகிறேன் என அங்கேயும் தனது காமெடி சென்ஸ் காண்பித்து ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார் ராஜு.
Recommended Video

யாருக்கு டைட்டில் கிடைக்கும்
ராஜு முதல் நபராக சேவ் ஆக தொடங்கியதில் இருந்தே அவருக்குத் தான் டைட்டில் கிடைக்கும் என்பது கன்ஃபார்ம் ஆகி விட்டது. அன் அஃபிஷியல் போலிங்கிலேயே பிரியங்காவை விட 10 சதவீதம் அதிக வாக்குகளுடன் ராஜு முன்னிலையில் உள்ளார். ஆனால், கடைசி வாரத்தில் ஏதாவது எதிர்பாராதது நடக்க வேண்டும் என்பதற்காக விஜய் டிவி உழைத்து வருவதாகவும் ராஜுவுக்கு பதிலாக பிரியங்காவுக்கு டைட்டில் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ராஜு ஆர்மி என்ன பண்ண போறாங்கன்னு வெயிட் பண்ணி பார்ப்போம்!


Click it and Unblock the Notifications