என்ன சொல்றீங்க பீஸ்ட் படத்துல விஜய்க்கு இந்தவொரு காஸ்ட்யூம் மட்டும் தானா? அப்போ அதெல்லாம்!

சென்னை: நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் காஸ்ட்யூம் குறித்த தகவல்கள் சினிமா வட்டாரத்தில் வேகமாக பரவி வருகிறது.

வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநர் நெல்சன் பீஸ்ட் படத்திலும் ஏகப்பட்ட புதிய முயற்சிகளை கையாண்டுள்ளாராம்.

விரைவில் வரவுள்ள பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நெல்சன் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை நடிகர் விஜய் பேசப் போகிறார் என்றும் கூறி வருகின்றனர்.

செம ஸ்பீடில் முன்னேற்றம்

செம ஸ்பீடில் முன்னேற்றம்

விஜய் டிவியில் பல ஆண்டுகளாக புரோகிராம் புரொட்யூசராக பணியாற்றி வந்த நெல்சன் தனது முதல் படத்தை சிம்புவுடன் கமிட் செய்து எடுக்க முடியாமல் கஷ்டப்பட்டார். ஆனால், நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய ராசி அவருக்கு சிவகார்த்திகேயன் உடன் டாக்டர், விஜய்யுடன் பீஸ்ட் மற்றும் ரஜினிகாந்தின் தலைவர் 169 என செம ஸ்பீடில் முன்னேறி வருகிறார்.

குறைவான பட்ஜெட்

குறைவான பட்ஜெட்

பெரிய பொருட்செலவில் தேவையில்லாத ஆடம்பர செலவுகளை செய்து வீணடிக்காமல் கதைக்கு தேவையான செலவுகளை மட்டுமே செய்து நல்ல ரிச் லுக்கில் டார்க் காமெடி படங்களை கொடுத்து தனித்துவமாக திகழ்ந்து வரும் இயக்குநர் நெல்சன் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்யின் பீஸ்ட் படத்தையும் குறைவான பட்ஜெட்டிலேயே இயக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வெளிநாடு ஷூட்டிங்

வெளிநாடு ஷூட்டிங்

படத்தின் சில காட்சிக்கு மட்டுமே வெளிநாடு செல்ல வேண்டியிருந்த நிலையில், ஜார்ஜியாவில் போய் படமாக்கி வந்த பீஸ்ட் படக்குழு ஒட்டுமொத்த படத்தையும் ஷாப்பிங் மால் செட் ஒன்றிலேயே படமாக்கி வருகின்றனர் என தகவல்கள் வெளியாகின. மேலும், சில வெளிநாட்டு படத்தின் காப்பியா? என்கிற கேள்வியும் இந்த படத்திற்கு எழுந்திருக்கிறது.

ஒரே வெள்ளை சட்டை

ஒரே வெள்ளை சட்டை

இந்நிலையில், நடிகர் விஜய் பீஸ்ட் படம் முழுக்க ஒரே ஒரு வெள்ளை சட்டை மற்றும் வெள்ளை பனியனுடன் தான் பெரும்பாலான காட்சிகளில் நடித்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே லீக்கான ஒரு காட்சியில் ஷாப்பிங் மாலில் ரத்தக் கறை படிந்த ஒரு வெள்ளை சட்டையை தான் விஜய் அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஆரம்பத்தில் ஒரு ராணுவ அதிகாரி காட்சிக்கு வேறு ஒரு உடையில் விஜய் வருவார் எனக் கூறப்படுகிறது.

அரபிக் குத்து பாட்டுல

அரபிக் குத்து பாட்டுல

அரபிக் குத்து பாட்டுல அத்தனை டிரெஸ் போட்டு விஜய் நடிச்சிருக்காரே என்கிற கேள்விக்கு ஆரம்ப காட்சி மற்றும் அந்த பாடல் காட்சியில் மட்டும் தான் விஜய்யின் காஸ்ட்யூம் மாறும் என்றும் கூறுகின்றனர். இதை பற்றியும் இயக்குநர் நெல்சன் பற்றியும் படப்பிடிப்பு தளத்தில் நடந்த ரகளைகள் பற்றியும் வரும் மார்ச் 20ம் தேதி நடைபெற உள்ள பீஸ்ட் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X