Don't Miss!
- News
ஹை-பை தர கூட ஆள் இல்லை! அவமானங்களுக்கு பேட்டால் பதிலடி தந்த ராஜத் படிதார்! யார் இந்த ஆர்சிபி புயல்?
- Automobiles
இந்த இ-ஸ்கூட்டருல போகும்போது லைசென்ஸ் கையில வச்சிருக்கணும்னு அவசியம் இல்ல! போலீஸ் பிடிச்சாலும் பயப்பட வேண்டாம்
- Finance
உக்ரைன் மீதான போர் எதிரொலி: ரஷ்யாவில் இருந்து வெளியேறுகிறதா மார்க்ஸ் & ஸ்பென்ஸர் நிறுவனம்?
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களின் பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும்...
- Sports
ஒரே ஓவரில் மாறிய விதி.. ஹாசல்வுட் செய்த கடைசி நேர மேஜிக்.. ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்றது எப்படி?
- Technology
16எம்பி ரியர் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ இ32எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
என்னது...விஜய் நடிக்க வேண்டிய சூப்பர் ஹீரோ கதையில் விக்ரம் நடிக்கிறாரா ?
சென்னை : விஜய் தற்போது டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். சென்னையில் பெய்த மழை, வெள்ளத்தால் தாமதமான பீஸ்ட் பட ஷுட்டிங் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படம் 2022 ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாம்.
இதற்கிடையில் விஜய்யின் அடுத்தடுத்த படங்களான தளபதி 66, தளபதி 67, தளபதி 68 ஆகிய படங்களின் அப்டேட்கள் வர துவங்கி விட்டன. இதனால் விஜய் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். இதோடு பா.ரஞ்சித் இயக்க போகும் படத்திலும் விஜய் நடிக்க போவதாக கூறப்பட்டது.
எஸ்ஜே சூர்யாவின் இறவாக்காலம் படம் ரிலீசாகுமா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

சார்பேட்டா பரம்பரை
பா.ரஞ்சித் கடைசியாக இயக்கிய சார்பேட்டா பரம்பரை படம் ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட்டிருந்தாலும் அனைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர் - நடிகையும் அவர்களின் கேரக்டரின் பெயர்களாலேயே செம பிரபலமாகி விட்டனர். சார்பேட்டா பரம்பரை படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து பா.ரஞ்சித் அடுத்தபடியாக யாரை இயக்க போகிறார் என அனைவரும் ஆர்வமாக காத்திருந்தனர்.

சியான் 61 அறிவிப்பு
இந்நிலையில் தனது அடுத்த படத்தை விக்ரமை வைத்து இயக்க போவதாக டிசம்பர் 2 ம் தேதி பா.ரஞ்சித் அறிவித்தார். சியான் 61 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியா க்ரீன் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிசம்பர் கடைசி வாரத்தில் இந்த படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாம்.

விஜய்க்காக எழுதப்பட்ட கதையா
இதில் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், விக்ரம் நடிக்க உள்ள சியான் 61 படத்தின் கதை, உண்மையில் விஜய்க்காக எழுதப்பட்டதாம். விஜய்க்காக தான் ஏற்கனவே கதை ஒன்றை தயாரித்து வைத்திருப்பதாக பா.ரஞ்சித் பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். Birdman போன்ற ஒரு படத்தை இயக்க விரும்புவதாகவும் ரஞ்சித் கூறி இருந்தார்.

ஓகே சொன்ன விக்ரம்
ஆனால் அடுத்தடுத்த மெகா பட்ஜெட் படங்களில் விஜய் பிஸியாக இருப்பதால் இந்த கதையை விக்ரமிடம் கூறி உள்ளார் பா.ரஞ்சித். விஜய்யை மனதில் வைத்து எழுதப்பட்ட இந்த சூப்பர் ஹீரோ கதையை கேட்டதும், இதில் நடிக்க உடனடியாக ஓகே சொல்லி விட்டாராம் விக்ரம். இதைத் தொடர்ந்தே அடுத்தகட்ட வேலைகளில் இறங்கி உள்ளார் ரஞ்சித். விக்ரம் நடித்த பிளாக்பஸ்டர் படமான தூள் படத்தின் கதையும் விஜய்க்காக எழுதப்பட்டது தானாம்.

விரைவில் சியான் 61 ஷுட்டிங்
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ள விக்ரம், கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய மகான் படத்தின் டப்பிங் வேலைகளையும் நிறைவு செய்துள்ளார். இதைத் தொடர்ந்து அவர் நடிக்கும் கோப்ரா படமும் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்த படத்தை முடித்த பிறகு பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்க போகிறார் விக்ரம்.

விக்ரமிற்காக நிறுத்தப்பட்ட படம்
அதே சமயம் பா.ரஞ்சித் தற்போது நட்சத்திரம் நகர்கிறது என்ற ரொமான்டிக் படத்தை இயக்கி வருகிறார். ஆனால் விக்ரம் படத்திற்காக இந்த படத்தின் வேலைகளை நிறுத்தி வைத்துள்ளாராம் ரஞ்சித். சியான் 61 படத்தை முடித்த பிறகு நட்சத்திரம் நகர்கிறது படத்தின் மீதமுள்ள வேலைகளை முடித்து விட்டு, கமலை வைத்து படம் இயக்க போகிறாராம் ரஞ்சித். இந்த படத்தையும் கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தான் தயாரிக்க போகிறதாம்.