twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா உறுதி...கமல் நடித்த விக்ரம் ஷுட்டிங் பாதியில் நிறுத்தப்பட்டதா ?

    |

    சென்னை : உலக நாயகன் கமலஹாசன், தற்போது சினிமா, அரசியல், டிவி ஷோ என ஒரே நேரத்தில் பலவற்றிலும் கவனம் செலுத்தி பிஸியாக இருந்து வருகிறார். இதற்கிடையில் கொரோனாவிற்கு முன்பே அறிவிக்கப்பட்ட கமல் ஹவுஸ் ஆஃப் கதர் நிறுவனத்தையும் சமீபத்தில் துவக்கி உள்ளார்.

    அடுத்த பிரம்மாண்டம்...குக் வித் கோமாளி 3 க்கு தயாராகும் விஜய் டிவி அடுத்த பிரம்மாண்டம்...குக் வித் கோமாளி 3 க்கு தயாராகும் விஜய் டிவி

    சிகாகோவில் இந்த நிறுவனத்தின் துவக்க விழாவை நடத்தி, ரேம்ப் வாக்கும் நடத்தினார். எந்த காலத்திலும் அணிய ஏற்ற வகையில் இருப்பதால் இது அமெரிக்க வாழ் தமிழர்களை கவர்ந்துள்ளது.

    மருத்துவமனையில் கமல்

    மருத்துவமனையில் கமல்

    இந்நிலையில் அமெரிக்கா சென்று வந்த கமலுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரை பரிசோதித்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமலுக்கு சிகிச்சை நடத்தப்பட்டு வருகிறது. கமலின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

    விக்ரம் செட்டில் கொரோனாவா

    விக்ரம் செட்டில் கொரோனாவா

    இதற்கிடையில் டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வந்த விக்ரம் படத்தின் ஷுட்டிங் நவம்பர் 17 ம் தேதி முதல் கோவையில் நடந்து வருகிறது. தற்போது கமலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், விக்ரம் பட செட்டில் கமலுடன் பணியாற்றியவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக சிலர் சந்தேகம் கிளப்பினர்.

     பாதியில் நிறுத்தப்பட்டதா ஷுட்டிங்

    பாதியில் நிறுத்தப்பட்டதா ஷுட்டிங்

    இதனால் விக்ரம் படத்தின் ஷுட்டிங் பாதியிலேயே நிறுத்தப்பட்டதாக தகவல் பரவியது. பெரும்பாலான காட்சிகளில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் இணைந்து நடிக்க போவதாக கூறப்பட்டதால், கமல் இல்லாமல் ஷுட்டிங்கை நடத்த முடியாது என பாதியில் நிறுத்தி விட்டதாகவும் கூறப்பட்டது.

    கோவை பக்கமே போகவில்லை

    கோவை பக்கமே போகவில்லை

    இது பற்றி விசாரித்ததில், விக்ரம் படத்தின் ஷுட்டிங் நிறுத்தப்படவில்லையாம். கமல் தவிர மற்ற நடிகர், நடிகைகள் நடிக்கும் சீன்கள் மட்டுமே எடுக்கப்பட்டு வருகிறதாம். அதுமட்டுமின்றி கோவையில் விக்ரம் ஷுட்டிங் துவங்கியது முதலே கமல் இதுவரை கோவை செல்லவில்லையாம்.

    விறுவிறுப்பாக நடக்கும் ஷுட்டிங்

    விறுவிறுப்பாக நடக்கும் ஷுட்டிங்

    சிகாகோ பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியதும் பிக்பாஸ் 5 ஷுட்டிங் இருந்ததால், அதை முடித்த பிறகு கோவை ஷுட்டிங்கை துவக்க கமல் திட்டமிட்டிருந்தாராம். அதற்குள் கமலுக்கு கொரோனா ஏற்பட்டதால் திட்டமிட்டபடி ஷுட்டிங்கில் கலந்து கொள்ள முடியவில்லையாம். இன்னும் 10 நாட்களாவது கமல் தனிமையில், ஓய்வில் இருக்க வேண்டும் என்பதால் மற்ற நடிகர்கள் நடிக்கும் காட்சிகள் மட்டுமே இப்போது எடுக்கப்பட உள்ளதாம்.

     கமல் கலந்து கொள்ளப்போவது எப்போது

    கமல் கலந்து கொள்ளப்போவது எப்போது


    டிசம்பர் மாதத்தில் நடக்கும் ஷுட்டிங்கில் கமல் கலந்து கொள்வார் அல்லது படத்தின் ஒட்டுமொத்த ஷுட்டிங்கையும் ஏற்கனவே திட்டமிட்டபடி முடித்து விட்டு, கடைசியாக விட்டுப் போன காட்சிகளை எடுக்கும் போது, கமலை வைத்து எடுக்க வேண்டிய காட்சிகளை எடுப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. கமல் இதுவரை கோவையில் நடக்கும் ஷுட்டிங்கில் கலந்து கொள்ளாததால் அங்கிருப்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை என உறுதியாக கூறப்படுகிறது.

    English summary
    Rumours started spreading that kamal's vikram set artists are also affected of covid 19. so coimbatore schedule shooting stopped. but this is not true.Kamal didn't go to coimbatore shooting schedule. Kamal had planned to start shooting in Coimbatore after completing the Big Boss 5 shooting when he returned to Chennai after completing his trip to Chicago
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X