twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விக்ரம் படம் லோகேஷ் கனகராஜ் கதையா? கமல் கதையா?... மிரள வைக்கும் அசத்தும் தகவல்

    |

    சென்னை : விக்ரம் படம் கதையை உருவாக்கியது லோகேஷ் கனகராஜா அல்லது கமல்ஹாசனா என்ற கேள்வி அனைவரின் மனதிலும் உள்ளது. அதே போல் விக்ரம் படம், கைதி 2 படத்தின் ஆரம்பம் என சொல்லப்படுவதால் கைதிக்கும் இதுக்கும் என்ன ஒற்றுமை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார் டைரக்டர் லோகேஷ் கனகராஜ். இந்த படம் ஜுன் 3 ம் தேதி ரிலீசாக உள்ளது. பான் இந்தியா படமாக 5 மொழிகளில் ரிலீசாக உள்ள இந்த படம் உலகம் முழுவதும் 5000 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ப்ரொமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையில் படம் பற்றி வெளியாகும் ஒவ்வொரு தகவல்களும் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. மற்றொரு புறம் எல்லா விஷயத்தையும் இப்போதே வெளியிட்டு விட்டார்கள் என்றால் படத்தில் என்ன சஸ்பென்ஸ் இருக்க போகிறது என ரசிகர்கள் பலர் வேதனையுடன் கூறி வருகின்றனர். மற்றொரு புறம் படம் பற்றி அதிக தகவல்களை தெரிந்து கொள்ளும் ஆர்வமும் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

    ஜெயலலிதாவின் பயோபிக்.. “குயின்“ இரண்டாம் பாகம்.. ரம்யாகிருஷ்ணனின் அடுத்த அதிரடி !ஜெயலலிதாவின் பயோபிக்.. “குயின்“ இரண்டாம் பாகம்.. ரம்யாகிருஷ்ணனின் அடுத்த அதிரடி !

    லோகேஷ் கனகராஜ் பெயர் ஏன்

    லோகேஷ் கனகராஜ் பெயர் ஏன்

    இந்நிலையில் லேட்டஸ்டாக யூட்யூப் சேனல் ஒன்றிற்காக லோகேஷ் கனகராஜ் பேட்டி அளித்துள்ளார். அதில், எனக்கு சினிமா மீது சிறு வயதில் இருந்தே ஆர்வம் அதிகம். ஆனால் அப்பாவிற்கு அது பிடிக்காது. அதனாலேயே அவருக்கும் எனக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டது. மாநகரம் படம் பண்ணி வெற்றி பெற்றதும், அது தான் படம் பண்ணியாச்சுல, அடுத்து வேற வேலைக்கு போகலாமே என சொன்னார். அவ்வளவு தான் அவருக்கு தெரிந்த சினிமா. அதனால் அவரை பாசமாக பழிவாங்கவே லோகேஷ் கனகராஜ் என அவருடைய பெயரையும் சேர்த்தே வைத்துக் கொண்டேன்.

    கமலுக்காக தயார் செய்த கதை

    கமலுக்காக தயார் செய்த கதை

    என்னிடம் எப்போதும் ஒரு கதை இருக்கும். ஒரு வரியிலாவது கதை வைத்திருப்பேன். ஆனால் கமல் சாருக்கென்று நான் கதை யோசித்ததே இல்லை. அவருடைய ப்ரொடக்ஷனில் ஒரு படம் பண்ணுவேன் என்று தான் நினைத்தேன். அவரை வைத்து படம் எடுப்பேன் என நினைத்து கூட பார்த்ததில்லை. அவரை வைத்து படம் எடுக்க வாய்ப்பு கிடைத்ததும், ஒன்றரை மாதங்கள் போராடி ஒரு கதையை தயார் செய்து விட்டு, கமல் சாரை போய் பார்த்தேன். ஒன்றரை மணி நேரம் ஒரு கதையை சொன்னேன். அது அவருக்கு பிடித்திருந்தது என்றார்.

    கமல் விக்ரமிற்காக உருவாக்கிய கதை

    கமல் விக்ரமிற்காக உருவாக்கிய கதை

    இருந்தாலும் எனக்கு திருப்தி ஏற்படவில்லை. அவரிடமே நீங்கள் பண்ண நினைத்து, பண்ணாமல் விட்ட ஏதாவது கதை இருக்கிறதா என கேட்டேன். அவரும் பல கதைகள் சொன்னார். அப்படி பேசிக் கொண்டிருக்கையில் ஒரு கேரக்டர் பற்றி சொல்லி, இது இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன் அது முடியாமல் போனது என்றார். இது சூப்பராக இருக்கு. இதையே பண்ணிருக்கலாமே என்றேன். இது தான் விக்ரம் படத்திற்காக நான் முதலில் உருவாக்கிய கதை. அப்போது அது புரியாது என்றனர். இந்த கேரக்டருக்கு பெரிதாக வரவேற்பு இல்லை. அதனால் விட்டு விட்டேன் என்றார். நான் உருவாக்கிய கதை அப்படியே இருக்கட்டும். இந்த கேரக்டரை வைத்து கதையை உருவாக்கிட்டு வருகிறேன் என்று சொன்னோன்.

    கமல் சொன்ன ஒரு வார்த்தை

    கமல் சொன்ன ஒரு வார்த்தை

    இப்படி உருவாக்கியது தான் கதை. முழு கதையையும் உருவாக்கி விட்டு கமல் சாரிடம் கொடுத்தேன். மூன்று நாட்களுக்கு பிறகு அழைத்து பேசினார். இந்த கதை எனக்கு பிடித்திருக்கிறது. இதில் நான் நடிகராக மட்டும் இருக்க விரும்புகிறேன் என்றார். கைதி படம் போல் விக்ரம் படமும் ஒரே இரவில் நடக்கும் கதை என்றார்.

    English summary
    In his interview, Lokesh Kanagaraj said that he narrate one and half hour. Kamal liked that story. But Lokesh not satisfied and discussed with Kamal. Kamal said one character and Lokesh liked that character and developed .
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X