தனுஷுக்கு தம்பியாக நடிக்கவுள்ளாரா இந்த நடிகர்?.. சூடுபிடிக்கும் தனுஷ் - செல்வா ப்ராஜக்ட்!
சென்னை: செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்கவுள்ள திரைப்படம் நானே வருவேன்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது இந்த படத்தின் தலைப்பு, கதைக்களம் ஆகியவற்றை செல்வராகவன் மாற்றி அமைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீண்டும் தனுஷுடன்
துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன படங்களை தொடர்ந்து செல்வராகவன் நீண்ட இடைவெளிக்கு பின் தனுஷுடன் இணைந்துள்ளார். இந்த கூட்டணி ஆயிரத்தில் ஒருவன் 2 விலும் ஒன்றாக இணைந்து பணியாற்றவுள்ளது. முதலில் நானே ஒருவன் வெளிவரவுள்ளது.

பரவிய தகவல்
நானே வருவேன் படப்பிடிப்பு தொடங்க இன்னும் சில நாட்கள் இருந்த நிலையில் இந்த படத்தின் கதைக்களம் முழுவதுமாக மாற்றப்படுகிறது என சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கு படக்குழுவின் தரப்பில் இருந்து இதுவரை மறுப்பு தெரிவிக்கப்படவில்லை.

கேங்ஸ்டர் கதை
இந்நிலையில் இந்த படத்தின் புதிய தலைப்பு ராயன் எனவும், புதிய கதைக்களம் ராயபுரத்தில் நடக்கும் கேங்ஸ்டர் கதை எனவும் சொல்லப்படுகிறது. இந்த படத்தில் தனுஷுக்கு தம்பியாக விஷ்ணு விஷால் நடிக்க வாய்புள்ளதாகவும் பேசப்பட்டு வருகிறது.
Recommended Video

ஆகஸ்டில் படப்பிடிப்பு
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தனுஷ் பிறந்தநாளை (ஜூலை 28) முன்னிட்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நானே வருவேன் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி தொடங்கும் என முன்னரே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதனால் இந்த படத்தின் படப்பிடிப்பும் அப்போதே தொடங்கும் நிலையில் உள்ளது.


Click it and Unblock the Notifications











