ரூ 300 கோடி வசூலித்துவிட்டதா விஸ்வரூபம்! - கமலை டென்ஷனாக்கும் ஒரு உட்டாலக்கடி கணக்கு!

By Shankar

ஒரு மனிதன் கஷ்டப்பட்டு, பல தடங்கல்களைக் கடந்து ஒரு புதிய பாதையை போட்டு வைக்கும்போது, சில மாடுகளோ எருமைகளோ அதில் கண்டபடி துள்ளிக் குத்தி சாணத்தை இறைத்துவிட்டுப்போகுமே... அப்படி ஒரு கூத்தை கமலின் ரசிகன் என்ற போர்வையில் சிலர் இப்போது செய்து வருகின்றனர்.

டிடிஎச்சில் வெளியாகவிருக்கும் கமலின் விஸ்வரூபம் படம், வெளியாவதற்கு முன்பே ரூ 300 கோடியை குவித்துவிட்டதாக சிலர் பொய்ச் செய்திகளைப் பரப்ப ஆரம்பித்துள்ளது, தியேட்டர்காரர்களுக்கு எப்படியோ... கமலுக்கு செம டென்ஷனை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த இரண்டு தினங்களாக பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில், 'ரீலீசுக்கு முன்பே விஸ்வரூபம் படத்துக்கு 30 லட்சம் பேர் முன்பதிவு செய்துவிட்டனர். இதன் மூலம் அவருக்கு ரூ 300 கோடி கிடைக்கிறது," என்று கொளுத்திப் போட்டுள்ளனர்.

ஏகக் கடுப்புடன்...

ஏகக் கடுப்புடன்...

இதுபற்றி கமல் தரப்பில் விசாரித்தபோது, ஏகக் கடுப்புடன் பதிலளித்தனர்.

கொஞ்சமும் பொறுப்பற்ற முறையில் சில அதிகப்பிரசங்கிகள் செய்யும் காரியம் இது. படத்தின் டிடிஎச் ஒளிபரப்பு குறித்து இப்போதுதான் அறிவித்துள்ளோம். இன்னும் முழுமையான முன்பதிவு கூட ஆரம்பிக்கப்படவில்லை. 30 லட்சம் டிடிஎச் முன்பதிவு என்று ஏர்டெல் ஒருபோதும் அறிவிக்கவில்லை. அது மொத்தமுள்ள டிடிஎச் சந்தாதாரர்களின் எண்ணிக்கைதான். இதில் எவ்வளவுபேர் முன்பதிவு செய்யப் போகிறார்கள் என்பது 9-ம் தேதி வரை சொல்ல முடியாது.

இப்படிப்பட்ட செய்திகளால், தேவையில்லாமல் மீண்டும் திரையுலகில் முறுகல் நிலை வரவே வாய்ப்புள்ளது. ஏற்கெனவே தியேட்டர்களுக்கு கூட்டம் வராது என்று புலம்பிக் கொண்டிருப்பவர்களை இன்னும் தூண்டிவிடுவதைப் போலாகாதா?

சினிமாவுக்கு நல்லது...

சினிமாவுக்கு நல்லது...

விஸ்வரூபம் டிடிஎச்சில் வெளியாவதால் நிச்சயம் கமல் போட்ட பணத்தை எடுத்துவிட உதவும். அதற்கு மேல் வரும் லாபம் குறித்து வெளிப்படையாக அறிவிக்கவிருக்கிறார் கமல். அதுவரை இந்தமாதிரி அதிகப்பிரசங்கிகள் அமைதியாக இருந்தால் சினிமாவுக்கு நல்லது," என்றார்.

நல்லா சத்தமா சொல்லுங்கப்பா...!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X