மதுரை தேனி இல்லையா? விஸ்வாசம் படம் முழுக்க மும்பைக் கதையா?

விஸ்வாசம் மும்பைப் பின்னணி கதை என சொல்லப்படுகிறது

Recommended Video

பட்டையை கிளப்பும் விசுவாசம் ஃபர்ஸ்ட் லுக்- வீடியோ

சென்னை: அஜித் நடித்துவரும் விஸ்வாசம் திரைப்படம் மும்பையை தொடர்புடைய கதையாக இருக்கலாம் எனத் தெரிகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் திரைப்படம் விஸ்வாசம். விநாயகர் சதுர்த்திக்கு பர்ஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமை சென்டிமென்டாக நேற்று அதிகாலை 3.40 மணிக்கு வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

Is Viswasam story line based on Mumbai?

சால்ட் அந்ட் பெப்பர் அஜித், மற்றுமொரு இளமையான அஜித் என இரண்டு கெட்டப்பையும் ரசிகர்கள் மாஸ் என கொண்டாடி வருகின்றனர். இப்படம் வீரம் திரைப்படத்தை போல மாசான குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இது மதுரை மற்றும் தேனி மாவட்டங்களை பின்புலமாகக் கொண்டு நடக்கும் கதை எனவும், அங்கே அஜித்தை வைத்து படப்பிடிப்பு நடத்தினால் ரசிகர்களின் அன்புத்தொல்லைக்கு ஆளாக நேரிடும் என்பதால் ஐதராபாத் மற்றும் ராஜமுந்திரியில் செட் போட்டு படமாக்குவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் படக்குழு வெளியிட்ட படப்பிடிப்பு தள புகைப்படங்கள், கதை மும்பையில் நடக்கிறதா என சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்கள் அஜித்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதை வெளியிட்டுள்ளனர். அதில் மகாராஷ்டிரா மாநில பதிவெண் கொண்ட ஆட்டோ இருக்கிறது. அதனால் படத்தின் கதை மும்பையில் நடக்கிறதா அல்லது சில முக்கிய காட்சிகள் மும்பையில் நடைபெறுவதுபோல் படமாக்கப்பட்டுள்ளதாக என கேள்வி எழுகிறது.

மும்பையை மையமாக வைத்து பாஷா, தலைவா, காலா என பல படங்கள் தமிழ் சினிமாவில் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X