யான் படத்தில் பிரபாகரன் மகன் கொலை காட்சிகள்?
யான் படத்தில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொலைக் காட்சிகள் இடம்பெறுவதாக வெளியான செய்திகளை மறுத்துள்ளார் படத்தின் இயக்குநர் ரவி கே சந்திரன்.
ஜீவா, துளசி நடிப்பில், எல்ரெட் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் யான்.

இந்தப் படத்தின் அறிமுக பத்திரிகையாளர் சந்திப்பின்போது, இதுகுறித்து ரவி கே சந்திரன் கூறுகையில், "குறிப்பிட்ட சம்பவங்கள் எதையும் மையப்படுத்தாமல், உலகளாவிய மனித உரிமை மீறல்களைத்தான் இந்தப் படத்தில் படமாக்கியுள்ளோம்.
பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொலைச் சம்பவம் பற்றியோ, தீவிரவாதம் அல்லது எந்த நாட்டின் உள்நாட்டுப் போர் குறித்தோ இந்தப் படம் பேசவில்லை.
கதையின் ஒரு பகுதி மொராக்கோவில் நடப்பதால் அங்கும் படப்பிடிப்பு நடந்துள்ளது. முழுக்க முழுக்க கலகலப்பு மற்றும் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த பொழுதுபோக்குப் படமாக யான் இருக்கும்," என்றார் இயக்குநர்.


Click it and Unblock the Notifications











