விமானத்திற்காக 7 மணிநேரம் காத்திருந்த இளையராஜா..என்ன காரணம் தெரியுமா?

சென்னை : இசைஞானி இளையராஜா சென்னை விமானநிலையத்தில் கிட்டத்தட்ட 7 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்துள்ளார்.

இசைஞானி இளையராஜா தனது வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் இசையுடன் செலவழித்து தன்னை புத்துணர்வாக வைத்திருக்கிறார்.

ஆத்மார்த்தமான மெலடி, துள்ளல் என எதுவாக இருந்தாலும், இளையராஜாவின் ரசிகர்களுக்கு அவையெல்லாம் பெரும் விருந்தாக இருக்கின்றன. தன்னிகரில்லா இசை மூலம் மனித மனங்களை ஆட்சி செய்வதில் இளையராஜாவுக்கு நிகர் இளையராஜா தான்.

இசைஞானி இளையராஜா

இசைஞானி இளையராஜா

1976ம் ஆண்டு காலகட்டத்தில், அன்னக்கிளி படத்தில் மச்சான பாத்தீங்களா? எனும் பாட்டு மூலம் ஒட்டுமொத்த இசையுலகத்தையும் தன் பக்கம் திரும்ப வைத்தவர் இசைஞானி இளையராஜா. ஒவ்வொரு பாடல்களுக்கும், பின்னணி இசை மூலம் படத்திற்கும் உயிர் கொடுத்த பெருமை இவருக்கு உண்டு.

உலகம் முழுவதும் ரசிகர்கள்

உலகம் முழுவதும் ரசிகர்கள்

இதுவரை 1000க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் பல்லாயிரம் பாடல்களுக்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா. தற்போது வெற்றிமாறனின் விடுதலை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தமிழகம், இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் இளையராஜாவுக்கான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அவர்களுக்காக உலகம் முழுவதும் கச்சேரிகளை இளையராஜா நடத்தி வருகிறார்.

ஹங்கேரியில் கச்சேரி

ஹங்கேரியில் கச்சேரி

இந்நிலையில், ஹங்கேரி நாட்டில் இசைக் கச்சேரி நடத்த இளையராஜா திட்டமிட்டு இருந்தார். இதற்காக இன்று அதிகாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் துபாய் சென்று அங்கிருந்து ஹங்கேரிக்கு செல்ல இருந்தார் இளைஞானி. அவர் செல்ல இருந்த விமானம் அதிகாலை 2 மணிக்கு புறப்படும் என கூறப்பட்டு இருந்தது நிலையில், இன்று அதிகாலையிலேயே விமான நிலையம் வந்தார் இளையராஜா.

7 மணிநேரம் காத்திருப்பு

7 மணிநேரம் காத்திருப்பு

ஆனால் சென்னையில் நேற்றிரவு பலத்த மழை பெய்ததன் காரணமாக விமானங்கள் புறப்படுவதிலும், தரையிரங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னையில் தரையிரங்க இருந்த விமானங்கள் சில பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. முதலில் 2 மணிநேரம் தாமதம் ஆகும் என கூறப்பட்டது.

டென்ஷனான இளையராஜா

டென்ஷனான இளையராஜா

பின்னர் ரன்வேயில் மழைநீர் தேங்கி இருப்பதால், 3 மணிநேரம் தாமதம் ஆகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் மேலும் 2 மணிநேரம் தாமதம் ஏற்பட்டது. இவ்வாறு தொடர்ந்து7 மணிநேரத்திற்கும் மேலாக இளையராஜா ஏர்போர்ட்டில் காத்திருந்ததால் டென்ஷனா இளையராஜா பின்னர் துபாய் விமானத்தில் ஏறிச்சென்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X