அட இதுதானா?..வெங்கட்பிரபுவின் அடுத்தடுத்த அதிரடி அறிவிப்பு.. என்ன இசைஞானியும் இருக்காரா!

சென்னை : மாநாடு, மன்மத லீலை படங்களை தொடர்ந்து அடுத்ததாக தமிழ், தெலுங்கில் உருவாகவுள்ள படத்தை இயக்கவுள்ளார் வெங்கட் பிரபு.

Recommended Video

Manmatha leelai | Venkat Prabhu | கண்டிப்பா விரசம் இருக்காது| Filmibeat Tamil

இந்தப் படத்தில் ஹீரோவாக நாக சைத்தன்யா இணைந்துள்ளார். அவருக்கு ஜோடியாக சூர்யாப்பட நாயகி இணைந்துள்ளார்.

இந்தப் படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் நடந்து முடிந்துள்ளன. தொடர்ந்து நடிகர்கள் தேர்வில் கவனம் செலுத்தி வருகிறார் வெங்கட் பிரபு.

நடிகர் நாக சைத்தன்யா

நடிகர் நாக சைத்தன்யா

நாகார்ஜூனாவின் மகனும் நடிகை சமந்தாவின் முன்னாள் கணவருமான நடிகர் நாக சைத்தன்யா, தெலுங்கில் முன்னணி ஹீரோவாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் தன்னுடைய தந்தையுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்திருந்தார்.

வெங்கட்பிரபுவுடன் நாக சைத்தன்யா

வெங்கட்பிரபுவுடன் நாக சைத்தன்யா

தெலுங்குப் பட ஹீரோக்கள் தமிழில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் நிலையில் அந்தப் பட்டியலில் தற்போது இணைந்துள்ளார் நாக சைத்தன்யா. அவர் தற்போது வெற்றிப் பட இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் இணைந்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது.

ஐதராபாத்தில் வெங்கட் பிரபு

ஐதராபாத்தில் வெங்கட் பிரபு

இந்தப் படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் ஐதராபாத்தில் நடைபெற்று வருகின்றன. இதற்காக தன்னுடைய குழுவினருடன் வெங்கட்பிரபு ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளார். படத்தின் கதை விவாதப் பணிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தற்போது நடிகர்கள் தேர்வில் வெங்கட் பிரபு கவனம் செலுத்தி வருகிறார்.

நாயகியாக க்ரீத்தி ஷெட்டி

நாயகியாக க்ரீத்தி ஷெட்டி

மாநாடு, மன்மத லீலை என அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்த வெங்கட் பிரபு, நேரடி தெலுங்குப் படத்தை இயக்கவுள்ளதாக முன்னதாக செய்திகள் வெளியான நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த செய்தி உறுதியானது. இந்நிலையில் தற்போது படத்தின் நாயகியாக க்ரித்தி ஷெட்டி தேர்வாகியுள்ளதாக வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இளையராஜா + யுவன் சங்கர் ராஜா

இளையராஜா + யுவன் சங்கர் ராஜா

இந்நிலையில் படத்தின் புதிய மற்றும் சிறப்பான இணைப்பாக படத்தில் இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் முதல்முறையாக தன்னுடைய பெரியப்பா இசையில் தான் இணைந்துள்ளதாகவும் தன்னுடைய கனவு நனவாகியுள்ளதாகவும் வெங்கட் பிரபு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

நேரடி தெலுங்குப்படம்

நேரடி தெலுங்குப்படம்

அடுத்தடுத்த இந்த அறிவிப்புகளை அதிரடியாக வெளியிட்ட வெங்கட் பிரபு, இன்னும் அதிரடிகள் தொடரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் நேரடி தெலுங்குப் படத்தை வெங்கட் பிரபு முதல்முறையாக இயக்கவுள்ளார். இதனால் தன்னுடைய முந்தைய படங்களை காட்டிலும் இந்தப் படத்தில் கூடுதல் கவனத்தை அவர் செலுத்தி வருவதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

மாநாடு படத்தில் டைம் லூப் என்ற சிறப்பான பாணியை ரசிகர்களை கவரும் வகையில் கொடுத்த வெங்கட் பிரபு, அடுத்ததாக மன்மத லீலை படத்தை இளம் ரசிகர்களை கவரும் வகையில் கொடுத்திருந்தார். இந்நிலையில் தற்போது தெலுங்கு, தமிழில் வெளியாகவுள்ள இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X