இசையுலகில் முடிசூடா மன்னன் இளையராஜாவின் பிறந்த நாள் இன்று.. குவியும் வாழ்த்து!

சென்னை : இசைஞானி இளையராஜாவின் 80வது பிறந்த நாள் விழாவை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் எழுபதுகளில் தொடங்கி பல தலைமுறைகள் கடந்து அனைவராலும் நேசிக்கப்படுவராக இருக்கிறார் இசைஞானி இளையராஜா.

தமிழ் ரசிகர்களுக்கு கிடைத்த இசை பொக்கிஷமாக இளையராஜாவுக்கு பல பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Isaignani ilayaraja celebrates his 80th birthday today

இசைஞானி இளையராஜா:ஊடகங்களும்,தொழில்நுட்பமும் வளராத காலகட்டத்தில் அனைவர் மனதையும் கவர்ந்த பாடலாக இருந்தது மச்சானை பாத்தீங்களா, இந்த பாடலை கேட்டு மயங்கிய ரசிகர்கள், இது என்ன இசை, இது என்ன ராகம் என புதயலை தேடுவது போல, தேடி தெரிந்து கொண்ட ஒரு பெயர் தான் இளையயராஜா.

முடிசூடா மன்னன்:கூலித் தொழிலாளிகள் முதல் மேல் தட்டுவாசிகள் வரை அனைவரையும் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இசையால் கட்டிப்போட்டு வைத்துள்ளார் இளையராஜா. காதல் என்றாலும், கலங்கி அழுவது என்றாலும், தனிமையை ரசிப்பதற்கு, கூட்டமா கொண்டாடுவதற்கு, இயற்கையை ரசிப்பதற்கு என அத்தனைக்கும் இளையராஜாவின் பாடல்கள் துணையாக இருக்கிறது.

உலகம் முழுவதும் ரசிகர்கள்:70 காலகட்டத்தில் தமிழ் தெரியாமல், வார்த்தைகளைக்கூட சரியாக உச்சரிக்க தெரியாமல் இந்தி பாடல்களை பாடிக்கொண்டிருந்த இந்தி பாடகர்களை தமிழில் நயத்துடன் பாடவைத்த பெருமை இளையராஜாவையே சேரும். இதையடுத்து, இந்தி திரையுலக இசை வல்லுநர்களும் இளையராஜாவின் தீவிர ரசிகர்களாக மாறிவிட்டனர்.

Isaignani ilayaraja celebrates his 80th birthday today

80வது பிறந்தநாள்:அதுமட்டுமில்லாமல் மேல் தட்டு மக்கள் மட்டுமே ரசித்து வந்த கர்நாடக இசையை பாமரர்களுக்கும் புரியும்படி எளிமையாக கர்நாடக இசையை புரியவைத்தவர் ராஜா. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம்,கன்னடம், இந்தி என ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இன்று 80வது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் இளையராஜா, நமது வாழ்க்கையில் இரண்டர கலந்து விட்ட அவரை, ரசிகர்கள் தங்களில் ஒருவராக பார்க்கிறார்கள்.

திரையிசைச் சகாப்தம் : இந்நிலையில், கமல்ஹாசன் இளையராஜாவிற்கு ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்,திரையிசைச் சகாப்தம் ஒன்று எட்டு தசாப்தங்களைக் கடந்து நிலைத்து மகிழ்வித்துக்கொண்டிருக்கிறது. இ, ளை, ய, ரா, ஜா ஆகிய ஐந்துதான் இந்தியத் திரையிசையின் அபூர்வ ஸ்வரங்கள் என்று சொல்லத்தக்க அளவில் தன் சிம்மாசனத்தை அழுத்தமாக அமைத்துக்கொண்டவர் என் அன்புக்கும் ஆச்சரியத்துக்கும் மிக உரிய உயரிய அண்ணன் இளையராஜா. இன்று பிறந்த நாள் காணும் இசையுலக ஏகச் சக்ராதிபதியை வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X