Don't Miss!
- Finance
16 வயது இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு வேலை கொடுத்த நிறுவனம்: சம்பளம் எவ்வளவு தெரியுமா?
- Automobiles
ஹூண்டாய் க்ரெட்டாவிலும் என்-லைன் வேரியண்ட்டா!! முதல் டீசர் வெளியீடு - இந்தியாவில் அறிமுகமாகுமா?
- News
"ஐஏஎஸ் ஆபீசரா அவங்க?" சேலையை தூக்கி சொருகி.. சகதிக்குள் இறங்கி.. வெள்ள மீட்பு பணியில் பெண் அதிகாரி!
- Sports
ஐபிஎல் குவாலிபையர் 2 - ராஜஸ்தான், பெங்களூரு இன்று மோதல் - பிளேயிங் லெவன்.. பிட்ச் ரிப்போர்ட்
- Technology
Realme GT Neo 3 Naruto Limited Edition அறிமுகம்.. ஆரஞ்சு நிறத்தில் அட்டகாச லுக்.. எப்போ வாங்கலாம்?
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் கவனக்குறைவால் பெரிய இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது...
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பூமியை தாண்டி இனி விண்ணிலும்… இளையராஜாவின் பாடல்… இசைஞானியின் மற்றுமொரு சாதனை!
சென்னை : பூமியை தாண்டி இனி விண்ணிலும் இசைஞானி இளையராஜாவின் பாடல் ஒலிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழனின் புகழ் விண்ணுலகம் வரை சென்றதை இளையராஜாவின் ரசிகர்கள் மனமுவந்து பாராட்டி வருகின்றனர்.
சிவகார்த்திகேயன் வெளியிட்ட சில நேரங்களில் சில மனிதர்கள் அட்டகாச பாடல்

இசைஞானி இளையராஜா
இசை நம் அன்றாட வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது. பலரின் துன்பங்களுக்கு மருந்தாக இருப்பது இசையின் நாயகன் இளையராஜாவின் இசை தான். தனிமை, அழுகை, மகிழ்ச்சி என எந்த மனநிலையில் இருந்தாலும் இவரின் இசை நம்மை வசீகரிக்கும், நம் தலைகோதும், மனதை வசப்படுத்தி கட்டி இழுக்கும் ஆற்றல்படைத்தது.

பூமியைத்தாண்டி விண்ணில்
தமிழ் ரசிகர்களுக்கு கிடைத்த இசை பொக்கிஷமாக இளையராஜா திகழ்ந்து வருகிறார். உலகம் முழுவதிலும் இந்த இசைஞானியின் இசைக்கு அடிமையாகி கிடப்பவர்கள் பல கோடி பேர் உள்ளனர். தன் இசையால் உலகை ஆட்டிப்படைத்த இசைஞானியின் இசை இனி பூமியைத் தாண்டி விண்ணிலும் ஒலிக்க உள்ளது.

நாசாவில்
நாசா உதவியுடன் உலகின் மிக குறைவான சாட்டிலைட் ஒன்று விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த சாட்டிலைட்டில் இசைஞானி இளையராஜாவின் பாடல் ஒலிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இளையராஜாவிடம் ஒப்புதல்
இந்த சாட்டிலைட்டை தயாரிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு குழு, இந்த சாட்டிலைட் உடன் பாடல் ஒன்றை இணைக்க முடிவு செய்தது. இதனை அடுத்து அவர்கள் இசைஞானி இளையராஜாவிடம் பேசி அவரது பாடலை சாட்டிலைட்டில் ஒலிக்க ஒப்புதல் வாங்கி உள்ளதாகவும் இதனை அடுத்து விண்ணிற்கு செல்ல உள்ள சாட்டிலைட்டில் இசைஞானி இளையராஜாவின் பாடல் விரைவில் ஒலிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழனின் புகழ் விண்ணுலகம் வரை சென்றதை இளையராஜாவின் ரசிகர்கள் மனமுவந்து பாராட்டி வருகின்றனர்.