விக்ரம் -பா ரஞ்சித் இணையும் படம்... படத்தின் புதிய அப்டேட் வெளியானது!
சென்னை : நடிகர் சியான் விக்ரம் மற்றும் பா ரஞ்சித் புதிய படம் ஒன்றில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்தப் படத்தில் இசையமைப்பதற்காக இசைஞானியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் விக்ரம்
நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் மகான் படம் அடுத்ததாக ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தில் அவருடன் துருவ் விக்ரமும் நடித்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதத்தில் ஓடிடியில் நேரடியாக ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. முதல் முறையாக இந்தப் படத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ளனர்.

விக்ரமின் அடுத்தடுத்த படங்கள்
மேலும் விக்ரம் தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் மற்றும் ஞானமுத்துவின் கோப்ரா உள்ளிட்ட படங்களின் சூட்டிங்கையும் விக்ரம் முடித்துள்ளார். அடுத்தடுத்த ப்ராஜக்ட்களில் அவர் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இயக்குநர் பா ரஞ்சித்துடன் இணைந்து அவர் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்பட்டா பரம்பரை வெற்றி
பா ரஞ்சித் சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை வெற்றியை அடுத்து தற்போது நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். காதல் படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது.

ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு
இதையடுத்து விக்ரமுடன் இணைந்து அவர் படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தை ஸ்டூடியோ க்ரீன் சார்பில் கேஇ ஞானவேல்ராஜா தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.முன்னதாக ரஞ்சித் -ஞானவேல் ராஜா கூட்டணியில அட்டக்கத்தி மற்றும் மெட்ராஸ் படங்கள் வெளியாகின. இந்நிலையில் 3வது முறையாக இந்தக் கூட்டணி இணையவுள்ளது.

இளையராஜா இசை?
இதனிடையே விக்ரம் -ரஞ்சித் கூட்டணியின் புதிய படத்தில் இசையமைக்க இசைஞானி இளையராஜாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

ஸ்பெஷல் ட்ரீட்
தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் விடுதலை, விஜய் சேதுபதியின் மாமனிதன் உள்ளிட்ட படங்களில் இசையமைத்து வருகிறார் இசைஞானி. இந்நிலையில் விக்ரம் -பா ரஞ்சித் கூட்டணியில் இசைஞானி இணைந்தால் அது ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்டாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications











