twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நம்முடைய இயக்குநர்களிடம் உயர்வான சிந்தனை இல்லை... இளையராஜா வருத்தம்!

    |

    சென்னை : இசைஞானி இளையராஜா தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளையும் சேர்த்து தற்போது 1500 படங்களை நெருங்கிக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து முதல் படத்திற்கு இசையமைப்பதை போன்ற உற்சாகத்துடன் இசையமைத்து வருகிறார்.

    தனது இசையை பயன்படுத்த தடை கோரி இளையராஜா வழக்கு..... 3 மியூசிக் நிறுவனங்களுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்தனது இசையை பயன்படுத்த தடை கோரி இளையராஜா வழக்கு..... 3 மியூசிக் நிறுவனங்களுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

    இசைஞானி இளையராஜா

    இசைஞானி இளையராஜா

    இசைஞானி இளையராஜா தான் சினிமாவில் அறிமுகமான ஆரம்ப காலக்கட்டம் முதல் தற்போது வரை சிறப்பான தன்னுடைய இசையை ரசிகர்களுக்கு தொடர்ந்து கொடுத்து வருகிறார். தாலாட்டும் அவரது இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை என்றே சொல்ல வேண்டும். மெலடி முதல் துள்ளலிசை வரை அனைத்து பரிமாணங்களையும் அவர் இசையால் ஏற்படுத்தியுள்ளார்.

     1500 படங்களை நெருங்கும் இளையராஜா

    1500 படங்களை நெருங்கும் இளையராஜா

    தொடர்ந்து 1500 படங்களை அவர் நெருங்கி வருகிறார். முதல் படத்திற்கு இசையமைத்ததை போன்ற அதே உற்சாகத்தை அவரிடம் தற்போதும் காண முடிகிறது. தற்போது அக்கா குருவி என்ற படத்திற்கு அவர் இசையமைத்துள்ளார். சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இந்தப் படம் உருவாகியுள்ளது.

    அக்கா குருவி படம்

    அக்கா குருவி படம்

    மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து அக்கா குருவி படத்தை தயாரித்துள்ளது. சாமி இயக்கத்தில் இந்தப் படம் குழந்தைகள் படமாக உருவாகியுள்ளது. இளையராஜா இசையில் படத்தில் 3 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பாடல்களை இளையராஜாவே எழுதியுள்ளார். மே மாதம் 6ம் தேதி படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

    சில்ட்ரன் ஆப் ஹெவன் படத்தின் ரீமேக்

    சில்ட்ரன் ஆப் ஹெவன் படத்தின் ரீமேக்

    ஒரு ஏழை குடும்பத்தில் வசிக்கும் அண்ணன், தங்கைகளின் கதையாக அற்புத படைப்பாக இந்தப் படம் உருவாகியுள்ளது. சில்ட்ரன் ஆப் ஹெவன் படத்தின் ஒரிஜினல் கெடாமல் படத்தை இயக்கியுள்ளார் சாமி. இந்தப் படத்தை பார்த்த இளையராஜா படத்தையும் அதன் இயக்குநரையும் பாராட்டியுள்ளார்.

    ஆச்சர்யம் அளித்த சில்ட்ரன் ஆப் ஹெவன்

    ஆச்சர்யம் அளித்த சில்ட்ரன் ஆப் ஹெவன்

    உலக சினிமாக்களை பார்ப்பதில் தனக்கு ஆர்வம் அதிகம் என்றும் அப்படி சில்ட்ரன் ஆப் ஹெவன் படத்தை பார்த்தபோது தனக்கு மிகுந்த ஆச்சர்யமாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஒரு ஷூவை வைத்துக் கொண்டு குழந்தைகளின் உலகத்தை தத்ரூபமாக தந்திருந்தது சிறப்பான அனுபவத்தை தந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இயக்குநர்களிடம் உயர்வான சிந்தனை இல்லை

    இயக்குநர்களிடம் உயர்வான சிந்தனை இல்லை


    ஏன் இத்தகைய படங்கள் தமிழில் வருவதில்லை என்று தனக்கு வருத்தமாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நம்முடைய இயக்குநர்களிடம் உயர்வான சிந்தனை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அந்தக் குறையை தற்போது இயக்குநர் சாமி போக்கியுள்ளதாவும் கூறியுள்ளார்.

    இளையராஜா பாராட்டு

    இளையராஜா பாராட்டு

    தற்போது சில்ட்ரன் ஆப் ஹெவன் படத்தை நம்முடைய ஊருக்கு தகுந்தவாறு கதையை மாற்றி ஒரிஜினல் படத்தைவிட சுவாரஸ்யமாக இயக்குநர் சாமி கொடுத்துள்ளதாகவும் இதுபோன்ற புதிய இயக்குநர்கள் வரவேண்டும் என்று தான் விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    நல்ல படைப்புகளை ஊக்குவிக்க வேண்டும்

    நல்ல படைப்புகளை ஊக்குவிக்க வேண்டும்

    தான் முதல்முறையாக இயக்குநர் மணிரத்னத்திற்கு இசையமைத்ததற்கு காரணமும் இதுதான் என்றும் அவர் கூறியுள்ளார். இதுபோன்ற நல்ல படைப்புகளை பொதுமக்கள் ஊக்குவிக்க வேண்டும் என்றும் இத்தகைய படங்கள் வெற்றி பெற வேண்டும் என்றும் இளையராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    English summary
    Ilayaraja hails Akka Kuruvi movie and its director samy
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X