உயிர்காத்த இசைஞானியின் இசை... நெகிழ்ச்சி சம்பவத்தை பதிவிட்ட துணை நடிகர்

சென்னை : கேன்சருக்கான அறுவை சிகிச்சையின்போது இளையராஜா பாடலை பாடிய சென்னைவாசி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இதையடுத்து அந்த நோயாளியை இளையராஜா நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து துணை நடிகர் ஒருவர் தனது முகநூலில் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

அறுவை சிகிச்சையில் பாட்டு

அறுவை சிகிச்சையில் பாட்டு

சென்னையை சேர்ந்த சீதாலட்சுமி என்ற பெண்மணி மார்பக புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சையின்போது இளையராஜாவின் பாடலைப் பாடிய சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இதையடுத்து மற்றொரு நெகிழ்ச்சி சம்பவமாக இளையராஜா அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருந்தார்.

வலியை மறக்க இளையராஜா பாட்டு

வலியை மறக்க இளையராஜா பாட்டு

சென்னையை சேர்ந்த சீதாலட்சுமி மிகச்சிறந்த பாடகியாக இருந்த நிலையில், அவருக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சையின்போது மயக்க மருந்து கொடுக்க முடியாத நிலை இருந்தது. இதையடுத்து தனது வலியை மறக்க அவர் இளையராஜாவின் பாடல்களை பாடியபடி அறுவை சிகிச்சையை செய்துக் கொண்டுள்ளார்.

இளையராஜாவுடன் சந்திப்பு

இளையராஜாவுடன் சந்திப்பு

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வரவேற்பை பெற்றது. தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் அவரையும் இளையராஜாவையும் சந்திக்க ஏற்பாடு செய்திருந்தனர். இந்த சம்பவம் இளையராஜாவின் ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

துணை நடிகர் பாராட்டு

துணை நடிகர் பாராட்டு

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கார்த்திக்ராஜா என்ற துணை நடிகர் தனது முகநூல் பக்கத்தில் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தன் இசையால் தானே வாழ்கிறீர்கள் என்று இளையராஜா கூறியதை பலர் தலைகணம் என்றனர் ஆனால் தற்போது அது உண்மையாகியுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராஜாவின் இசை முடிவிலி

ராஜாவின் இசை முடிவிலி

சீதாலஷ்மி குறித்த சம்பவங்களை பகிர்ந்துள்ள அவர் ஒரு இனிய மனது இசையை அழைத்து செல்லும் என்னும் இளையராஜாவின் இசை பாடலில் கங்கை அமரன் எழுதிய வரிகளுக்கு இந்த நிகழ்வு பொருந்தும் என்றும் ராஜாவின் இசை முடிவிலி (Infinity) என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

 போனசாக சந்திப்பு

போனசாக சந்திப்பு

சீதாலட்சுமி தற்போது தனது சிகிச்சை முடிந்து நலமாக உள்ளார். அறுவை சிகிச்சையின்போது மயக்க மருந்து இல்லாமல் அதை எதிர்கொண்ட அவருக்கு இளையராஜாவின் இசை ஒரு போனஸ் என்றால், அவரை சந்தித்து வாழ்த்து பெற்றது கூடுதல் போனசாக அமைந்திருந்தது.

உடல்நலத்தை மேம்படுத்தும்

உடல்நலத்தை மேம்படுத்தும்

மருத்துவமனை நிர்வாகம் கூறியது போல, சீதாலட்சுமி மிகவும் நேசிக்கும் இளையராஜாவை நேரில் சந்தித்தது அவர் தன்னுடைய உடல்நலத்தை மேம்படுத்திக் கொள்ள பெரிதும் உதவிகரமாக அமையும். அவர் தன்னுடைய உடல்நலக் குறைவிலிருந்து விரைவில் வெளிவர இளையராஜா பாடல்களும் உதவும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X