இது எப்படி இருக்கு... இசைஞானியின் வேற லெவல் புத்தாண்டு வாழ்த்து!
சென்னை : நாளைய தினம் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மக்கள் தயாராகி வருகின்றனர்.
இதையொட்டி பிரபலபங்கள் பலரும் தங்களது புத்தாண்டு வாழ்த்துக்களை முன்கூட்டியே பகிர்ந்து வருகின்றனர்.
இசைஞானி இளையராஜாவும் தன்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்களை வீடியோ மூலம் பகிர்ந்துள்ளார்.

புத்தாண்டு 2022
நாளைய தினம் புத்தாண்டு பிறக்கவுள்ளது. உலக மக்கள் அனைவரும் 2022 புத்தாண்டை வரவேற்க தயாராகி வருகின்றனர். இந்த ஆண்டு கொரோனா உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையில் கழிந்த நிலையில், வரும் ஆண்டாவது மக்களுக்கு சிறப்பானதாக அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டங்கள்
நாளைய தினம் புத்தாண்டையொட்டி இன்று இரவு பிரபல ஹோட்டல்கள் உள்ளிட்டவை தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விருந்து கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது. முன்னதாக இதற்கான புக்கிங்குகளம் செய்யப்பட்டுள்ளன.

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மக்கள் தயார்
கோயில்களிலும் புத்தாண்டையெட்டி பல்வேறு சிறப்பு பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக புத்தாண்டு சிறப்பாக அமையாத நிலையில் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ள மக்கள் தயாராகி வருகின்றனர்.

பிரபலங்கள் வாழ்த்து
நாளைய தினம் புத்தாண்டையொட்டி இன்று முதலே புத்தாண்டு வாழ்த்துக்களை பிரபலங்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இசைஞானி இளையராஜாவும் வீடியோ மூலம் தனது புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். காரில் அமர்ந்தபடி அவர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இளையராஜா வாழ்த்து
மேலும் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ள அவர், இளமை இதோ இதோ என்ற பாடலை ஏற்ற இறக்கத்துடன் பாடி, இது எப்படி இருக்கு என்று முடித்துள்ளார். எப்போதுமே அடக்கான செயல்பாடுகளை காட்டும் இளையராஜா இந்த வீடியோவில் அட்டகாசமான புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது சிறப்பாக காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











