ரஜினியுடன் என்றும் என்றென்றும்... பழைய புகைப்படத்தை பகிர்ந்த இசைஞானி!
சென்னை : இசைஞானி இளையராஜா எப்போதும் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய ராஜா என்பதை தன்னுடைய இசைப்பயணத்தால் நிரூபித்து வருபவர்.
தற்போது ஆயிரம் படங்களை கடந்து தொடர்ந்து பயணித்து வருகிறார். இளம் தலைமுறையினரையும் தனது இசையால் ஈர்த்து வருகிறார்.
சமூக வலைதளங்களிலும் சிறப்பாக இயங்கி வருகிறார். அப்போது ரசிகர்களுக்கு அப்டேட்களையும் வாழ்த்துக்களையும் அளித்து வருகிறார்.

இசைஞானி இளையராஜா
இசைஞானி இளையராஜா என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் இளையராஜா. இவரது இசையில் பல பாடல்கள் காலத்தை தாண்டி சிறப்பாக காணப்படுகின்றன. தன்னுடைய இசையால் பலரையும் கட்டிப் போட்டவர் மற்றும் கட்டிப் போட்டு வருபவர்.

பெண் குரலில் பாடிய இசைஞானி
ஆரம்பத்தில் பாவலர் வரதராஜனுடன் இணைந்து இசைக்கச்சேரிகளை செய்துவந்த இளையராஜா தன்னுடைய இளம் வயதிலேயே ரசிகர்களின் நாடித்துடிப்பை உணர்ந்தவர். ஆரம்ப காலகட்டத்தில் பெண் குரலில் இவர் பாடி வந்துள்ளார். தொடர்ந்து சினிமாவில் வாய்ப்பு கிடைத்து அதை முழுமையாக பயன்படுத்திக் கொண்டார்.

அன்னக்கிளி படத்தில் அறிமுகம்
1976ல் வெளியான அன்னக்கிளி படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து தன்னுடைய படங்களின்மூலம் இசையுலக ஜாம்பவானாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இவருக்கு இந்தப் படத்தின்போது இயக்குநர் பஞ்சு அருணாச்சலம் வைத்த பெயரே இளையராஜா.

பாடல்கள்மூலம் உயிர் கொடுத்தவர்
படத்தில் ஒருமுறை காட்சிகளை பார்த்துவிட்டால் உடனடியாக இசைக்குறிப்புகளை எழுதிக் கொடுத்துவிட்டு ஒலிப்பதிவிற்கும் சென்றுவிடுவாராம். அத்தகைய ஞானம் கொண்ட இவர் கமல், ரஜினி உள்ளிட்ட பலரின் ஆரம்ப படங்களுக்கு தன்னுடைய பாடல்கள் மற்றும் இசை மூலம் உயிர் கொடுத்தவர்.

1417வது படத்தில் இசை
தற்போது தன்னுடைய 1417வது படமான நினைவெல்லாம் நீயடாவில் இசையமைத்து வருகிறார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். சமீப காலங்களில் சமுக வலைதளங்களிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவரது புத்தாண்டு வாழ்த்து வீடியோ பட்டையை கிளப்பியது.

சமூக வலைதளங்களில் பிசி
தொடர்ந்து லதா மங்கேஷ்கரின் மறைவின்போதும் இரங்கல் வீடியோ வெளியிட்டார். மேலும் இசைக் கச்சேரிகளையும் நடத்தி வருகிறார். இசைக் கச்சேரிகள், படத்திற்கு இசை, பல தனிப்பட்ட இசை முயற்சிகள், சமூக வலைதளங்கள் என தன்னை பிசியாக வைத்துக் கொள்கிறார்.

ரஜினியுடன் புகைப்படம் பகிர்வு
இந்நிலையில் தற்போது ரஜினியுடன் தான் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து என்றும் என்றென்றும் என்று கேப்ஷன் வெளியிட்டுள்ளார். இந்த கருப்பு வெள்ளை புகைப்படத்தில் ரஜினியிடம் எதைப் பற்றியோ சுவாரஸ்யமாக விவாதிக்கிறார் இசைஞானி.


Click it and Unblock the Notifications