இந்த வீட்டில் நீ யாருனு காட்டு… கம்முனு இருக்கும் பவானியை உசுப்பேத்தும் இசைவாணி !
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 36வது நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
பிக்பாஸ் வீட்டில் நியமாகவும், தைரியமாகவும் விளையாடிய ஸ்ருதி நேற்று வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
இதையடுத்து பிக் பாஸ் வீட்டில் தற்போது 13 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.

தலைவர் போட்டிக்கான டாஸ்க்
பிக் பாஸ் வீட்டில் இந்த வார தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான போட்டிக்கு பொம்மலாட்டம் என தலைப்பு வைக்கப்பட்டு இருந்தது. இதில், தலைவர் போட்டியில் கலந்துகொள்ளும் 7 போட்டியாளர்களின் பெயர் கொண்ட சோளக்காட்டு பொம்மை, கட்டப்பட்ட கூண்டின் உள்ளே வைக்கப்பட்டிருக்கும் அந்த கூண்டை திறப்பதற்கான சாவி வைக்கப்பட்டு இருக்கும்.

பொம்மை உடைப்பு
தலைவர் போட்டியில் பங்குபெறாத ஹவுல்மெட்ஸ், சாவியை எடுத்து கூண்டைத் திறந்து யார் தலைவராக இருக்க உங்களுக்கு விருப்பம் இல்லையோ அந்த போட்டியாளரின் பெயர் இருக்கும் பொம்மையின் தலையை உடைக்க வேண்டும் அப்படி யார் பெயர் இருக்கும் பொம்மைகள் உடைகிறதோ. அந்த நபர்கள் வரிசையாக தலைவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.

இந்த வார தலைவர்
அதேசமயம் தலைவர் போட்டியில் இருக்கும் நபர்களின் பொம்மையை உடைக்காமல் தடுப்பதற்கு உங்களின் பேச்சு திறமையை பயன்படுத்தி மற்றவரிடம் பேசுவதன் மூலமாக உங்கள் பொம்மையை பாதுகாக்க முயற்சிக்கலாம் இறுதியில் எந்த நபரின் பெயர் உள்ள பொம்மை உடையாமல் இருக்கிறதோ அவரே பிக் பாஸ் வீட்டில் இந்த வார தலைவராக தேர்வு செய்யப்படுவார் என அறிவித்தார் பிக் பாஸ்.

கேப்டன் இசைவாணி
இதையடுத்து,கார்டன் ஏரியாவில் பவானி மற்றும் இசைவாணி பேசிக்கொண்டு இருக்கிறார். அப்போது, பேசிய இசைவாணி, நான் கேப்டன் ஆகணுனும்னு யாரும் நினைக்கவே இல்லை , நான் இந்த முறை என் நாணயத்தை பயன்படுத்தி கேப்டன் ஆக போகிறேன் என்கிறார்.

நீ யாருனு காட்டு
நான் காயினை நியூஸ் பண்ண மாட்டேன் என்கிறார் பவானி. இதையடுத்து பேசிய இசைவாணி, நீ என்ன லூசா, நான் உனக்கு ஒரு அட்வைஸ் பண்ணுவேன் புரிஞ்சிக்கோ, நீ நாமினேஷன்ல போய்டாதே... காயினை நியூஸ் பண்ணு,. அதேபோல, ஆளுமையும் பண்ணு, கேப்டசியையும் கையிலெடு அப்பதான் இந்த வீட்டில் நீ யாருனு காட்டமுடியும் என்று பவானியை ஏற்றிவிடுகிறார் இசைவாணி.


Click it and Unblock the Notifications











