உணவு பொருளை வைத்து விளையாடாதீங்க...அட்வைஸ் செய்த இசைவாணி

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வெற்றிகரமாக நான்காவது வாரத்தை எட்டி உள்ளது. இந்த வாரத்தின் துவக்கத்தில் தாமரையின் காயினை பாவனியின் உதவியுடன், சுருதி எடுத்தார். இது மிகப் பெரிய பிரச்சனை ஆக்கப்பட்டது.

இதை தொடர்ந்து இந்த வாரத்திற்கான லக்சுரி பட்ஜெட் டாஸ்க் நடத்தப்பட்டது. ஊருவிட்டு ஊரு வந்து என்ற இந்த டாஸ்கில் வீட்டில் உள்ளவர்கள் இரு அணிகளாக பிரிய வேண்டும். இதில் ஒரு அணியினர் கிராமத்தினராகவும், மற்றொரு அணியினர் நகரத்தார் போலவும் உடை அணிந்து கலந்து கொள்ள வேண்டும்.

அதிகம் வென்ற கிராமம்

அதிகம் வென்ற கிராமம்

இதில் கொளுத்தி போடு என்ற அதிக மெழுகுவர்த்தி ஏற்றும் போட்டியில் நகரத்தார் அணியை சேர்ந்த நிரூப் அதிக மெழுகுவர்த்திகளை ஏற்றி ரூ.3000 ஐ வென்றார். இதைத் தொடர்ந்து ஊதி, உருட்டி என்ற போட்டியில் ஏற்றப்பட்ட மெழுகுவர்த்திகளுக்கு இடையில் வைக்கப்பட்ட பந்தை ஊதி, ஊதி பந்தை நகர்த்த வேண்டும். இறுதியில் அதிக விளக்குகள் அணையாமல் இருக்கும் கிராமத்தினர் அணியை சேர்ந்த ராஜு வெற்றி பெற்று ரூ.4000 ஐ வென்றார்.

பிரட்டை திருடிய அணி

பிரட்டை திருடிய அணி

கிராமத்து அணியினரை வெறுப்பேற்றுவதற்காக நகரத்து அணியினர் பிரட் வைத்து சாப்பிட்டு வந்தனர். இதனால் கடுப்பான கிராமத்து அணியை சேர்ந்த அக்ரஷா உள்ளிட்டோர் பிரட்களை ஒழித்து வைத்து விளையாடினர். இதனால் நகரத்தார் அணியை சேர்ந்தவர்கள் சாப்பிட ஏதும் இல்லாமல் புகார் செய்தனர்.

அட்வைஸ் செய்த இசைவாணி

அட்வைஸ் செய்த இசைவாணி

அப்போது நிரூப் பிரட் பாக்கெட்களை தூக்கிக் கொண்டு ஓடினார். அவரை அக்ஷரா துரத்தி முடிக்க முயற்சி செய்தார். அப்போது அனைவரையும் அழைத்த இசைவாணி, உணவு பொருட்களை வைத்து விளையாதீர்கள். அது கூட இல்லாமல் வெளியில் பலர் கஷ்டப்படுகிறார்கள். அதனால் இது தவறாக தோன்றும் அதனால் உணவுப் பொருட்களை வைத்து விளையாடாதீர்கள் என அட்வைஸ் செய்தார்.

ரூல்ஸ் முக்கியம்

ரூல்ஸ் முக்கியம்

மேலும் வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தக் கூடாது என்பது ரூல்ஸ் புக்கில் உள்ளது. அதனால் அனைவரும் ரூல்சை கடைபிடியுங்கள். சிக்கனமாக சமைப்பது உள்ளிட்டவைகள் மிக அவசியம் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து இசைவாணிக்கு உரிய பவர் என்னவென்று பிக்பாஸ் விளக்கினார்.

பிறகு யார் பிரட்டை திருடியது, பிரட் யாரிடம் உள்ளது என விசாரித்தார். அப்போது அக்ஷரா அதற்கு விளக்கம் அளித்து, தாங்கள் தான் பிரட்டை திருடியதாக ஒப்புக் கொண்டு, அதை நிரூப்பிடம் அளித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X