உங்களுக்கு பொண்ணு இருக்கு.. நீங்களும் ஒரு அப்பா.. அண்ணாச்சி மீது வெறுப்பை கொட்டித்தீர்த்த இசைவாணி !
சென்னை : உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி டாஸ்கில், இமான் அண்ணாச்சியின் கண்ணாடியாக இருந்த இசைவாணி அவர் குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
இந்த டாஸ்கிற்காக டீம் ஏ கண்ணாடியாக மாறி, டீம் பி-யினரை பிரதிபலிக்க வேண்டும் என பிக் பாஸ் அறிவிக்கிறார்.
சிபி- அக்ஷராவின் கண்ணாடியாகவும், இசைவாணி - இமான் அண்ணாச்சியாகவும், பிரியங்கா தாமரையாகவும், நிரூப் அபினய்யாகவும், வருண் ஐக்கியாகவும், பாவனி ராஜுவின் கண்ணாடியாகவும் இருந்தனர்.

கண்கலங்கிய அபிநய்
உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி டாஸ்கில், ஒருவரை ஒருவர் வெறுக்கும் நபர்களை பிக் பாஸ் ஜோடி சேர்த்து வேடிக்கை பார்க்கிறது. ஆரம்பமே அமர்களம் என்பது போல அபிநய் முன்பாக பேசிய நிரூப், நீ ஃபேக்கு, சகுனி சொன்னது சரிதான் நீ சரியான சகுனி, உனக்கு அறிவு இல்லை என அபிநய்யை மானாவரியாக திட்டித்தீர்த்தார் நிரூப். ஒரு கட்டத்தில் நிரூப்பின் பேச்சால் அபிநய் கண்கலக்கினார். அவரை பிரியங்கா சமாதானப்படுத்தினார்.

வேடிக்கையான டாஸ்க்
இதையடுத்து, கண்ணாடி டாஸ்க்கில் இமான் அண்ணாச்சியின் கண்ணாடியாக இசைவாணி இருந்தார். அண்ணாச்சி என்னவெல்லாம் செய்கிறாரோ அதை போலவே இசைவாணியும் செய்து வந்தார். இந்த டாஸ்கை பார்ப்பதற்கு சற்று காமெடியாகத்தான் இருந்தது. இதில் ட்வீஸ்ட் வைத்த பிக்பாஸ் கண்ணாடி முன் நின்று இசைவாணியின் மனதில் அண்ணாச்சி பற்றி நினைப்பதை சொல்லும்படி கூறினார்.

காயப்படுத்தும்படி பேசாதீங்க
அண்ணாச்சி முன் நின்ற இசைவாணி, பிக்பாஸ் வீட்டு யார் பேசினாலும் பேசவிட மாட்டீங்க, ஒருத்தர் கருத்து வைக்கிறப்போ அதை கதைகொடுத்து கேட்கனும், ஆனால், நீங்க மட்டும் 3 பேர் கூட பேசுவீங்க, என்னை ஏழரை கோடி பேருக்கு தெரியும் உன்னை யாருக்கு தெரியும்னு சொன்னீங்க அப்படி பேசாதீங்க வளர்ந்து வருபவர்களை காயப்படுத்தாதீர்கள் என்றார்.

குமுதா ஹேப்பி அண்ணாச்சி
அதோடு விடுவார் என்று பார்த்தால், நல்ல வாய்ப்பு கிடைச்சி இருக்கு இதைவிடக்கூடாதுனு, மூச்சை பிடித்துக்கொண்டு இந்த வீட்டில் இருக்கும் பெரியவர் நீங்கதான், உங்களுக்கும் பொண்ணு இருக்கு யாரையும் கஷ்டப்படுத்தாதீங்க என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சொல்லிவிட்டு கடைசியா, மத்தபடி குமுதா ஹோப்பி அண்ணாச்சி என்பது போல... வேற ஒன்னும் இல்லை, அண்ணாச்சியை எனக்கு பிடிக்கும் என்றார். இசைவாணி பேசி அத்தனை வார்த்தைகளையும் கையைவிடாமல் பெருமையுடன் இமான் அண்ணாச்சி கேட்டுக்கொண்டார்.


Click it and Unblock the Notifications











