பிக் பாஸிலிருந்து இந்த வாரம் வெளியேறியது இவர் தான்… கன்ஃபார்ம் ஆகிடுச்சு !

சென்னை: பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியாகி உள்ள போட்டியாளர் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

பாவனி, தாமரை, இசைவாணி, சிபி,நிரூப், ஐக்கி, இமான் அண்ணாச்சி, அபிநய், அக்ஷரா ஆகியோர் நாமினேஷன் லிஸ்டில் இருக்கின்றனர்.

இதில், நேற்று முதல் ஆளாக பாவனி காப்பாற்றப்பட்டுள்ளார்.

குறைந்த வாக்குகள்

குறைந்த வாக்குகள்

பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் யார் எமினேட் செய்யப்படுவார், யார் காப்பாற்றப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகி உள்ளது. இதில் குறைந்த வாக்குகளை பெற்று பிக் பாஸ் வீட்டிலிருந்து இசைவாணி வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எனக்கும் அறிவு இருக்கு

எனக்கும் அறிவு இருக்கு

கடந்த வாரம் இசைவாணி கேப்டன்ஷிப் பற்றி தாமரையிடம் கேட்டார் கமல், அப்போது, அன்பாவே சாப்பாடு தராது மூஞ்சை காமிச்சித்தான் சாப்பாடு தரும் என்று கூறினார். இதையடுத்து, இருவருக்கும் இடையே சண்டை தீவிரமானது. சாப்பாட்டை யாராவது அப்படித் தருவாங்களா... எனக்கும் அறிவு இருக்கு என்றார்.

பாட்டால் வந்த சண்டை

பாட்டால் வந்த சண்டை

இதையடுத்து இருவருக்கும் இடையே தொட்டதுக்கு எல்லாம் சண்டை நடந்து கொண்டே இருந்தது. கண்ணாடி டாஸ்கில் இசைவாணியின் கண்ணாடியாக

மாறிய தாமரை, உனக்கு நிறைய அறிவு இருக்கு ஆனால், பல நேரம் அறிவு இல்லாதது போல் நடந்துக்கிற என்றார். இதையடுத்து , தாமரை ஏதோ பாட்டை பாட இசைவாணி கடுப்பாகி சண்டை இட்டார்

என்ன நக்கலா

என்ன நக்கலா

தாமரையிடம், இசைவாணி மனசாட்சியை தொட்டு சொல்லு நீ நக்கலா பாட்டு பாடுனியா இல்ல சந்தோசமா பாடுனியா என்று கேட்டார். அதற்கு தாமரை உன்னை பற்றி பேசுவதற்கு ஒன்றுமில்லை அதனால் நான் பாட்டு பாடுனேன் என்று கூறுகிறார். இதனால் காண்டான இசைவாணி பார்க்கும் மக்களுக்கு தெரியும் என்னை பற்றி என்று சொன்னார்.

வரம்பை மீறிய பேச்சு

வரம்பை மீறிய பேச்சு

இப்படியே இருவருக்கும் இடையேயும் வாக்குவாதம் முற்றிக் கொண்டே சென்றது. மேலும், இசைவாணி பல நேரம்,வரம்பை மீறி பேசி உள்ளார். இதை பார்க்கும் மக்கள் நிச்சயம் கடுப்பாகத்தான் ஆகி இருப்பார்கள். நெட்டிசன்களும் இசைவாணி தரம் தாழ்ந்து பேசுகிறார் என்று கருத்துக்களை கூறி வந்தனர். இதுவே இசைவாணி வெளியேற்றத்திற்கு முக்கிய காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அபிநய் காப்பாற்றப்பட்டார்

அபிநய் காப்பாற்றப்பட்டார்

எப்போதும் விளிம்பு வரை சென்று காப்பாற்றப்படும் அபிநய்யும் இந்த வாரம் காப்பாற்றப்பட்டுள்ளார் போல, கமலே இதை நேற்று கூறியிருந்தார் அப்போதும் நாமினேட் ஆகுறீங்க ஆனால் மக்கள் உங்களை காப்பாற்றுகிறார்கள் என்றார். தற்போது இசைவாணி வெளியேறி உள்ளதாக வந்துள்ள தகவலால் அவர் இந்த வாரம் காப்பாற்றப்பட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X