நடிகர் சங்க திருமண மண்டபத்திற்கு ஐசரி கணேஷ் ரூ. 1 கோடி நன்கொடை
சென்னை: விஷாலுக்கு பெண் பார்த்துள்ள நிலையில் நடிகர் சங்க கட்டிட வளாகத்தில் திருமண மண்டபம் கட்ட ஐசரி கணேஷ் ரூ. 1 கோடி நிதி அளித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டிய பிறகு தான் தனக்கு திருமணம் என்று நடிகர் விஷால் அடம்பிடித்தார். சென்னை தி. நகரில் நடந்து வரும் கட்டிட பணிகள் ஏப்ரல் மாதம் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ. 30 கோடி செலவில் இந்த கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் விஷாலுக்கு ஆந்திராவை சேர்ந்த அனிஷா என்ற பெண்ணை திருமணம் செய்து வைக்க அவரின் பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.
ரூ. 2 கோடி
நடிகர் சங்க கட்டிட வளாகத்தில் ரூ. 2 கோடி செலவில் ஐசரி வேலன் பெயரில் திருமண மண்டபம் கட்டுகிறார்கள். அதற்கான முழு செலவையும் நடிகர் சங்க அறக்கட்டளையின் அறங்காவலர் குழு உறுப்பினர் ஐசரி கணேஷ் ஏற்றுக் கொண்டுள்ளார். இந்நிலையில் முதல் கட்டமாக ரூ. 1 கோடி நன்கொடை அளித்தார்.

கணேஷ்
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளரும், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், தென்னிந்திய நடிகர் சங்க சாரிட்டபிள் அறக்கட்டளையின் அறங்காவலருமான ஐசரி கணேஷ் நடிகர் சங்கத்தின் 62ம் ஆண்டு பொதுக்குழுவில் அறிவித்து ஒப்புதல் பெற்றதின் அடிப்படையில் நடிகர் சங்க இடத்தில் புதிதாக கட்டிக்கொண்டிருக்கும் கட்டிடத்தில் உள்ள சிறிய திருமண மண்டபத்திற்கு அவரது தந்தையான ஐசரி வேலன் பெயரை வைப்பதற்கு ஒப்புதல் பெறப்பட்டது. மேலும் அதற்கான கட்டுமான செலவுத்தொகை அனைத்தையும் அவரே ஏற்றுக்கொள்வதாக ஒப்புக்கொண்டார்.
எனவே அதனடிப்படையில் முதற்கட்டமாக ரூ.1 கோடியை நடிகர் சங்கத் தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோரிடம் ஐசரி கணேஷ் வழங்கினார். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக அவருக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது என்று நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம்
விஷால், அனிஷாவுக்கு ஹைதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. அவர்களின் திருமணம் நடிகர் சங்க வளாக கட்டிடத்தில் தான் நடக்கும் என்று நம்பப்படுகிறது.

நடிகை
விஷாலும், வாரிசு நடிகையும் காதலிப்பதாக பல காலமாக பேசப்பட்ட நிலையில் அவர் ஆந்திரா பெண்ணை திருமணம் செய்ய உள்ளார். இந்நிலையில் அந்த வாரிசு நடிகை பற்றி பேச வேண்டாம், அவர் விஷாலை வெறுக்கிறார் என்று அவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











