ஐசரி கணேஷ் மகள் திருமணம்.. வரதட்சணை 1000 பவுன் தங்கமா?.. ரொக்கம் எவ்வளவு தெரியுமா?..பிரபலம் ஷேரிங்ஸ்

சென்னை: கோலிவுட்டில் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று வேல்ஸ் நிறுவனம். ஏகப்பட்ட படங்களை தயாரித்துவரும் அந்நிறுவனத்தை ஐசரி கணேஷ் வழிநடத்திவருகிறார். கடைசியாக அந்த நிறுவனம் அகத்தியா, சுமோ உள்ளிட்ட படங்களை தயாரித்தது. இப்போது அதன் தயாரிப்பில் ஜீனி, மூக்குத்தி அம்மன் 2, டயங்கரம் ஆகிய படங்கள் இருக்கின்றன. இவற்றில் டயங்கரம் படத்தை பிரபல யூடியூபரான விஜே சித்து இயக்கி, ஹீரோவாக நடிக்கிறார். சில நாட்களுக்கு முன்புதான் இதுதொடர்பான அறிவிப்பு வீடியோ வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவரது மகளுக்கு சென்னையில் இன்று பிரமாண்டமாக நடந்தது. அதில் திரை நட்சட்த்திரங்கள் பலர் கலந்துகொண்டார்கள்.

தமிழ் சினிமாவில் ஃபேமஸான தயாரிப்பு நிறுவனம் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்ட்டர்நேஷனல். தயாரிப்பு நிறுவனத்தைவிடவும் கல்லூரிகள்தான் அந்த குழுமத்துக்கு முதன்மையானது. வேல்ஸ் என்கிற பெயரில் கல்வி நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன. எம்ஜிஆர் காலத்தில் எம்.எல்.ஏவாக இருந்த ஐசரி வேலன்தான் இந்தக் குழுமத்தை முதன்முறையாக நிறுவியவர் என்பது குறிப்பிடத்தக்கது. வேல்ஸ் யுனிவர்சிட்டியில் ஏராளமானோர் படித்துவருகிறார்கள். சூழல் இப்படி இருக்க அவருக்கு பிறந்தவர்தான் ஐசரி கே.கணேஷ். தந்தை வழியில் அவரும் கல்லூரிகளை கவனிக்க தொடங்கினார். ஒருகட்டத்தில் சினிமா தயாரிப்பிலும் தன்னுடைய கவனத்தை செலுத்துவதற்கு அவர் தயாரானார்.

வரிசையாக படங்கள்: அந்தவகையில் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்ட்டர்நேஷனல் சார்பில் தொடர்ந்து படங்கள் தயாரிக்கப்படுகின்றன. அதன்படி தேவி, போகன், எல்கேஜி, கோமாளி, மூக்குத்தி அம்மன், என்னை நோக்கி பாயும் தோட்டா, குட்டி ஸ்டோரி, வெந்து தணிந்தது காடு, ஜோஷ்வா இமை போல் காக்க என அவ்வளவு படங்களை அந்த நிறுவனம் தயாரித்திருக்கிறது. கோலிவுட்டை பொறுத்தவரை பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் லிஸ்ட்டில் வேல்ஸ் நிறுவனம் டாப் 5 இடங்களுக்குள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம் இப்போது மூக்குத்தி அம்மன் 2, டயங்கரம் உள்ளிட்ட படங்களை தயாரித்துவருகிறது. இதற்கிடையே ஐசரி கணேஷ் தனது உறவினரை ஹீரோவாகவும், கௌதம் மேனனை இயக்குநராகவும் வைத்து ஜோஷ்வா இமை போல் காக்க படத்தை தயாரித்தார்.

கௌதம் மேனனுக்கு ஹெல்ப்?: அதாவது கௌதம் மேனன் பல கோடி ரூபாய் கடனில் சிக்கியிருக்கிறார். அதன் காரணமாகத்தான் அவர் நடித்து அதில் வரும் பணத்தை கொண்டு சிறுக சிறுக கடனை அடைக்க முடிவு செய்தார். அப்படிப்பட்ட நிலைமையில்தான் ஐசரியுடன் கௌதமுக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அந்தப் பழக்கம் க்ளோஸ் ஆனதை தொடர்ந்து தனது உறவினரை வைத்து படம் இயக்கினால் கடனை அடைக்க தயார் என்று ஐசரி கூறியதாகவும்; இதனால் வேல்ஸ் நிறுவனத்துக்கும் கௌதம் மேனனுக்கும் ஒரு ஒப்பந்தமே இருக்கிறது என்றும் திரைத்துறையில் ஓபனாக பேசிவருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்தப் பேச்சில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது உறுதியாக தெரியவில்லை என்பதும் கவனிக்க வேண்டியது.

பிரமாண்ட பூஜை: இது ஒருபக்கம் இருக்கு மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜை சமீபத்தில்தான் போடப்பட்டது. படத்தின் பூஜையையே ஒரு திருவிழா போல் நடத்தி காட்டினார் ஐசரி கணேஷ். அதில் மீனா, ரெஜினா, ஒன்றிய அமைச்சர் முருகன் என ஏராளமானோர் கலந்துகொண்டார்கள். ஹை பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் அந்தப் படம் கண்டிப்பாக வசூல் வேட்டை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரவி மோகனை வைத்து வேல்ஸ் நிறுவனம் ஜீனி என்ற படத்தையும் தயாரிக்கிறது. இதுவும் ஹை பட்ஜெட் படம் என்றுதான் சொல்லப்படுகிறது. இப்படி ஒரே நேரத்தில் இரண்டு ஹை பட்ஜெட் படங்களை அந்த நிறுவனம் தயாரித்துவருவது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது.

Isari Ganesh gave 5 000 crores Rupees as dowry for his daughter s wedding

ஐசரி கணேஷ் மகள் திருமணம்: இந்நிலையில் ஐசரி கணேஷின் மகள் ப்ரீத்தாவுக்கு திருமணம் நடத்திவைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி லஷ்வின் என்பவரை குடும்பத்தினர் பார்த்து வைத்தார்கள். இன்று சென்னையில் பிரமாண்டமாக திருமணம் நடந்தது. இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், மணிரத்னம், ரவி மோகன், கார்த்தி, ஆதிக் ரவிச்சந்திரன், விக்ரம் பிரபு, பிரபு,அதிதி ஷங்கர் என ஏராளமானோர் கலந்துகொண்டார்கள். இவர்களில் ரவி மோகன் தனது தோழியான பாடகி கெனிஷாவுடன் கலந்துகொண்டது பேசுபொருளாகியிருக்கிறது. கடந்த வருடம் ஆர்த்தியை ரவி விவாகரத்து செய்தபோது கெனிஷாவுடன் அவர் இணைத்து பேசப்பட்டார் என்பது நினைவுகூரத்தக்கது. இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரான பாலாஜி பிரபு இந்தத் திருமணம் குறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு ஓபனாக பேசியிருக்கிறார்.

தயாரிப்பாளர் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "வேல்ஸ் கல்லூரி முதலில் சிறியதாகத்தான் ஆரம்பிக்கப்பட்டது. அதனை பிரமாண்ட கல்வி நிறுவனமாக மாற்றியது ஐசரி கணேஷ்தான். இந்த நிறுவனம் இவ்வளவு தூரம் வளர்ந்ததற்கு காரணமே கணேஷிடம் இருக்கும் தனித்திறமைதான். இன்றைய தினம் அவரது மகளுடைய திருமணம் பிரமாண்டமாக நடந்தது. சென்னை ஈசிஆர் சாலையே ஸ்தம்பித்துவிட்டது. பரிமாறப்பட்ட சாப்பாடும் அருமையாக இருந்தது. அதேபோல் மணமகள் அணிந்திருந்த நகைகள் எல்லாம் பார்ப்பவர்களின் கண்களை பறிக்கும் விதமாக அமைந்திருந்தன. நாளை இதே இடத்தில்தான் வரவேற்பும் நடைபெறவிருக்கிறது. மூக்குத்தி அம்மன் படத்துக்கே அவ்வளவு செலவு செய்தவர் ஐசரி கணேஷ்.

மகள் திருமண செலவு: தன்னுடைய மகள் திருமண ரிசப்ஷனுக்காக 30 கோடி ரூபாய் அளவில் செட் போட்டிருந்தார். ஒரு மாதமாகவே இந்த செட் வேலைகள் நடந்தன். கிட்டத்தட்ட 20,000 பேர் இந்த ரிசப்ஷனுக்கு வருவார்கள் என்று தெரிகிறது. 2000 கோடி ரூபாய் இந்த திருமணத்துக்கு செலவு என்று சொல்கிறார்கள். ஆனால் அவ்வளவு செலவழித்து இந்தத் திருமணத்தை நடத்துவதற்கு வாய்ப்பே இல்லை. திருமணம் மற்றும் ரிசப்ஷனை சேர்த்து மொத்தமாக 700 கோடி ரூபாய்வரை செலவு செய்யப்பட்டிருக்கலாம். 200 வகையான உணவுகள் பரிமாறப்படுகின்றன. 1000 பவுன் நகை, 5,000 கோடி ரூபாய் வரதட்சணையாக அவர் தருவதாக சொல்கிறார்கள். தன்னுடைய மகளுக்காக அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார்.

மாலத்தீவில்: மேலும் மாலத்தீவிலும் ஒரு விழாவை நடத்த அவர் திட்டமிட்டிருக்கிறார். அதற்காக மட்டும் 500 கோடி ரூபாய்க்கும் மேல் ஏற்பாடுகள் செய்திருக்கிறாராம். அதிலும் 2000 பேர்வரை கலந்துகொள்வார்கள். பல விஐபிகள் அந்த விழாவுக்கு வரவிருக்கிறார்கள். அவர்களுக்கு தன்னுடைய சொந்த செலவிலேயே விமான டிக்கெட்டுகளை புக் செய்கிறாராம். கணேஷின் மகளை திருமணம் செய்திருப்பவர் லஷ்வின். அவரது தாத்தா ரஜினிகாந்த்தை எல்லாம் வைத்து படம் தயாரித்த நடராஜன் ஆவார். இவருக்கும் ஐசரி கணேஷ் குடும்பத்துக்கும் ஐசரி வேலன் இருந்த காலத்திலிருந்தே நல்ல புரிதல் இருந்தது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X