விக்ரம் படத்திற்காக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் செய்யப்போகும் வேலையை பாருங்க!
சென்னை : உலகநாயகன் நடிப்பில் வரும் 3ம் தேதி விக்ரம் படம் உலகளவில் ரிலீசாக உள்ளது. இதற்கான முன் தயாரிப்பு மற்றும் பிரமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. படத்தின் சென்சார் முடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நேற்றைய தினம் படத்தின் ட்ரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு நிகழ்ச்சி பிரம்மாண்டமான அளவில் நடைபெற்றுள்ளது.

உலகநாயகன் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது விக்ரம் படம். இந்தப் படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். அவர் கமலின் தீவிர ரசிகராக உள்ள நிலையில் அவர் கமல்ஹாசனை எப்படி இயக்கியிருப்பார் என்ற எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக ரசிகர்கள் மட்டுமின்றி விமர்சகர்கள் உள்ளிட்டவர்களிடமும் காணப்படுகிறது. அதற்கேற்ப படத்தின் போஸ்டர்கள், டீசர், பாடல்கள் மட்டுமின்றி நேற்று வெளியாகியுள்ள ட்ரெயிலரும் சிறப்பாக காணப்படுகிறது. 4 ஆண்டுகளுக்கு பிறகு கமலின் விக்ரம் படம் ரிலீசாக உள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது. விஜய் சேதுபதி இந்தப் படத்தில் மிகவும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். முன்னதாக ரஜினி, விஜய்க்கு வில்லனாக நடித்துள்ள அவர், தற்போது கமலுக்கும் வில்லனாகியுள்ளார்.
இந்நிலையில் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு நேற்று மாலை 6 மணியளவில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் மட்டுமின்றி, நடிகர் சிம்பு, இயக்குநர் பா ரஞ்சித், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உள்ளிட்டவர்களும் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய ஐசரி கணேஷ், தான் தன்னுடைய தயாரிப்பில் உருவாகும் படங்களையே பார்க்க மாட்டேன் என்று தெரிவித்தார். ஆனால் தற்போது கமலின் விக்ரம் படத்தை முதல் நாள் முதல் ஷோவான அதிகாலை 4 மணி ஷோவை போய் பார்க்க திட்டமிட்டுள்ளதாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடிகரும் தயாரிப்பாளருமான ஐசரி வேலனின் சிலை திறப்பு நிகழ்ச்சியில் கமல் கலந்து கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. விக்ரம் படத்தின் சென்சார் பணிகளை இடையில் விட்டுவிட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தப்பித்து வந்ததாக அவர் நிகழ்ச்சியில் பேசியபோது தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











