ஐசரி கணேஷின் தாயார் காலமானார்..முதல்வர் இரங்கல்!

சென்னை : ஐசரி கணேஷின் தாயார் புஷ்பா ஐசரி வேலன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Isari Ganesh Mother passed away | ஆறுதல் சொல்ல திரண்டு வந்த திரை பிரபலங்கள் *Kollywood

பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் தாயாரும் பிரபல நகைச்சுவை நடிகர் ஐசரி வேலனின் மனைவியுமான புஷ்பா ஐசரி வேலன் வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 75. அவரது இறுதிச் சடங்கு நாளை காலை 9 மணிக்கு ஈஞ்சம்பாக்கம் இல்லத்திலிருந்து புறப்பட்டு தாழம்பூர் வேல்ஸ் பல்கலை வளாகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

isari ganeshs mother pushpa passed away obituary of chief minister mk stalin

மறைந்த புஷ்பா ஐசரி வேலனின் கணவரும் நடிகருமான ஐசரி வேலன் எம்ஜிஆர் நடித்த பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி எம்ஜிஆர், அதிமுக என்ற கட்சியை தொடங்கியபோது அந்த கட்சியில் இணைந்து ஆர்கே நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். மறைந்த புஷ்பா ஐசரிவேலன் மகன், ஐசரிகணேஷ் கல்வியாளர் மற்றும் தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளராக உள்ளார். ஐசரி.கே.கணேஷ் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருந்தாலும் தனது தந்தையின் வழியில் தொடந்து திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார்.

isari ganeshs mother pushpa passed away obituary of chief minister mk stalin

ஐசரி கணேஷின் தாயாரின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், திரைப்பட கலைஞரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மறைந்த ஐசரி வேலனின் துணைவியாரும், கல்வியாளரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஐசரி கணேஷின் தாயாருமான புஷ்பா ஐசரி வேலன் மறைவுற்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன்.

பாசமிக்க தாயாரை இழந்து வாடும் ஐசரி கணேசுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் இத்துயர்மிகு நேரத்தில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார். ஐசரி கணேஷ் வீட்டில் நிகழ்ந்த துயரத்திற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X