சொத்து தகராறு: 'அப்பா விட்டுட்டு போன சொத்துல எனக்கும் பங்கு இருக்கு' ஐசரி கணேஷ் தங்கை ஆவேசம்!
சென்னை: "அப்பா விட்டுட்டு போன சொத்துல எனக்கும் பங்கு இருக்கு" என பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் தங்கை ஆவேசமாக பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த துணை அமைச்சர் ஐசரி வேலனின் இளைய மகளான டாக்டர் அழகு தமிழ் செல்வி, தனது அண்ணன் ஐசரி கணேஷ் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 1987ல் தந்தை இறந்தபோது நெல்சன் மாணிக்கம் சாலையில் மூன்றரை கிரவுண்ட் நிலம் இருந்ததாகவும், எம்.ஜி.ஆர் உதவியால் அந்தக் கடனை அடைத்ததாகவும் கூறினார்.

அந்த சொத்தை வைத்து 1992ல் வேல்ஸ் எஜுகேஷனல் டிரஸ்ட் தொடங்கப்பட்டது. அதில் தான் ஆயுள் உறுப்பினராக இருந்ததாகவும், ஆனால் தனக்குத் தெரியாமலேயே போலி ஆவணங்கள் மூலம் தன்னை நீக்கிவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
தந்தை விட்டுச் சென்ற சொத்தில் 24 அப்பார்ட்மெண்ட் கட்டி விற்று, அதன் மூலம் ஐசரி கணேஷ் பல கல்லூரிகளை நிறுவியதாக அழகு தமிழ் செல்வி தெரிவித்தார். பார்மசி, பிசியோதெரபி, டென்டல், மெடிக்கல், நாட்டிகல் சயின்ஸ், ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் என பல கல்லூரிகளை அவர் நிறுவியுள்ளார்.
2022ல் அம்மா இறந்த பிறகு டிரஸ்ட் கணக்குகளை கேட்டபோது, தன்னிடம் மரியாதை குறைவாக நடந்துகொண்டதாகவும், அதன் பிறகு ஆவணங்களை எடுத்து பார்த்தபோதுதான், 2017லேயே தன்னை நீக்கியது தெரியவந்ததாகவும் அவர் கூறினார்.
மேலும், டிரஸ்ட் நிதியை சொந்த உபயோகத்திற்காக பயன்படுத்தி, பிலிம் இன்டர்நேஷனல் என்ற சினிமா கம்பெனி ஆரம்பித்து படங்கள் தயாரித்ததாகவும், பெங்களூரில் 100 ஏக்கரில் ஜோலிவுட் பிலிம் சிட்டி வாங்கியிருப்பதாகவும், ஏரோபிளேன் வாங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
"நியாயம் கேட்கப் போன என்னை, ஐசரி கணேஷின் மனைவியும் மகள்களும் தகாத வார்த்தைகளால் திட்டினார்கள். அப்பா பெயர், புகழ், சொத்து எல்லாவற்றையும் கொடுத்துவிட்டுப் போனார். ஆனால் என் அண்ணன், தங்கையான என்னை மட்டும் இல்லீகலாக டிரஸ்டில் இருந்து நீக்கிவிட்டார்" என்று கண்ணீருடன் கூறினார்.

தற்போது பெண் உரிமைக்காகவும் நியாயம் வேண்டியும் ஐசரி கணேஷை எதிர்த்து போராட வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். தனக்கு கடவுள், அப்பா, அம்மா உதவி செய்வார்கள் என்றும், மறுக்கப்பட்ட உரிமையை வாங்கி தருவார்கள் என்றும் நம்புவதாக கூறினார். பிரம்மாண்டமாக நடைபெற்ற ஐசரி கணேஷின் மகள் திருமணத்துக்கு கூட தன்னை அழைக்கவில்லை என்று புலம்பித் தள்ளிவிட்டார்.
பிரபல சினிமா தயாரிப்பாளராகவும் கல்வி தந்தையாகவும் இருந்து வரும் ஐசரி கணேஷ் மீது அவரது தங்கை குற்றச்சாட்டுகளை அடுக்கியிருப்பது கோலிவுட்டில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications











