Don't Miss!
- Finance
சீனாவின் மெகா திட்டம்.. மின்சார வாகன உற்பத்தியாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்!
- Automobiles
ஒரு சில ஊர்ல கன்னாபின்னானு ஓட்றாங்க... எந்த நகரில் நல்ல கார் டிரைவர்கள் அதிகம் இருக்கறாங்க தெரியுமா?
- News
பேரறிவாளன் விடுதலை தாமதமானாலும் மகிழ்ச்சி! உடல் நலம் பேண வேண்டும்! அன்புடன் அன்புமணி போட்ட கண்டிஷன்!
- Sports
மீண்டும் ஏதேனும் பிரச்சினையா? குர்னல் பாண்டியாவை வெளியே அனுப்பிய கம்பீர்.. 3 மாற்றம் தேவையா?
- Technology
விவோ ஒய்75 4ஜி விரைவில் இந்தியாவில் அறிமுகம்: 44 எம்பி செல்பி கேமரா அம்சம்., பட்ஜெட் விலை!
- Lifestyle
வெங்காய சட்னி
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சிம்புவுக்கு டாக்டர் பட்டம் கொடுத்ததுக்கு இதுதான் காரணமா... இது தெரியாம போச்சே
சென்னை : நடிகர் சிலம்பரசனுக்கு சமீபத்தில் சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதனை விமர்சித்து சிலர் கருத்து கூறி வந்தனர். ஆனால் சிலம்புவிற்கு என்ன காரணத்திற்காக டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது என தற்போது வெளியிட்டுள்ளார் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேசன்.
பல ஆண்டுகளாக பல சர்ச்சைகளில் சிக்கி, ரெட் கார்டு போடும் அளவிற்கு பல சிக்கல்களில் சிக்கி இருந்தார் சிம்பு. இதனால் பட வாய்ப்புக்களும் அவருக்கு குறைந்தது. தொடர்ந்து சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர்கள் பலரும் கருத்து கூறி வந்தனர். இதனால் சிம்பு எங்கிருக்கிறார் என கேட்கும் அளவிற்கு ஆனது. திடீரென பயங்கர குண்டான தோற்றத்துடன் சிம்பு இருக்கும் போட்டோக்கள் வெளியாகி அதிர்ச்சி அளித்தன.
தாய்மையின்
சுகம்
காசு
கொடுத்தால்
கிடைக்காது
..
பிரியங்கா
சோப்ராவுக்கு
எதிராக
குவியும்
ட்ரோல்கள்!

அசத்தலான ரீஎன்ட்ரி
ஆனால் சில நாட்களிலேயே சில தயாரிப்பாளர்கள் பல எதிர்ப்புக்களையும் மீறி சிம்புவை வைத்து படம் எடுக்க முன்வந்தனர். மீண்டும் பட வாய்ப்புக்கள் வந்ததால் கடுமையாக ஒர்க்அவுட் செய்து, அடையாளமே தெரியாத அளவிற்கு ஸ்லிம் தோற்றத்திற்கு மாறி, அசத்தலாக ஈஸ்வரன் படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்தார். ஆனாலும் அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை.

பிரம்மாண்ட வெற்றி தந்த மாநாடு
இருந்தாலும் அவரை நம்பி வெங்கட் பிரபு மாநாடு படத்தை எடுத்தார். இந்த படத்தை கடுமையாக உழைத்து, சொன்ன தேதியில் முடித்து கொடுத்தார் சிம்பு. இது படம் பிரம்மாண்ட வெற்றியை தந்ததுடன், சிம்பு மீதான அத்தனை குற்றச்சாட்டுகளையும் அடித்து நொறுக்கியது. இதனால் அவருக்கு போடப்பட்ட ரெட் கார்டை திரும்ப பெற்றார்கள். இதனால் அடுத்தடுத்த படங்கள் புக் ஆகின. மாநாடு படமும் நல்ல வரவேற்பு, பாராட்டை பெற்று 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்து சிம்புவை கவனிக்கப்படும் முக்கிய ஹீரோ ஆக்கியது.

சிம்புவுக்கு டாக்டர் பட்டம்
மாநாடு படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக அறிவித்தது வேல்ஸ் பல்கலைக்கழகம். இந்த விழா சமீபத்தில் நடைபெற்றது. இதனை ரசிகர்கள் பாராட்டினாலும், சிலர் கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில், சிம்புவிற்கு எதற்காக டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது என்ற உண்மையை வெளிப்படையாக சொன்னார் பிரபல தயாரிப்பாளரும், வேல்ஸ் பல்கலைக்கழக துணைவேந்தருமான ஐசரி கசேணன்.

இவங்களுக்கும் கொடுத்திருக்கோம்
அவர் கூறுகையில், சிம்பு, வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் வெந்து தணிந்தது காடு, கொரோனா குமாரு ஆகிய இரண்டு படங்களில் நடிப்பதால் தான் அவருக்கு டாக்டர் பட்டத்தை வழங்கினோம் என சிலர் நினைக்கிறார்கள். ஆனால் நாங்கள் சிம்புவுக்கு மட்டுமல்ல. இதற்கு முன் சத்யராஜ், நாசர், விவேக், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, கிரிக்கெட் வீரர் ஸ்ரீகார்ந்த் உள்ளிட்ட பலருக்கும் ஒவ்வொரு ஆண்டும் கொடுத்து வருகிறோம்.

டாக்டர் பட்டம் வழங்க காரணம்
டாக்டர் பட்டம் நான் தனிப்பட்ட முறையில் எடுக்கும் முடிவு அல்ல. நிர்வாகிகள் குழு தான் யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்கிறார்கள். என்ன காரணத்திற்காக சிம்புவை தேர்வு செய்தீர்கள் என்று கூட நான் கேட்டேன். அதற்கு அவர்கள், கெளரவ டாக்டர் பட்டத்திற்கு பரிந்துரைக்காக வந்தவர்கள் Profile ல் சிம்புவினுடையது நன்றாக இருந்தது. அவர் பன்முக திறமை கொண்டவர். சினிமா துறைக்காக தொடர்ந்து பல ஆண்டுகளாக தனது பங்களிப்பை அளித்து வருகிறார். அதனால் தான் அவரது பெயரை தேர்வு செய்தோம் என்றார்கள் என்றார் ஐசரி கணேசன்.