twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஐசரி கே.கணேஷின் ஹாட்ரிக் வெற்றி! - முதலமைச்சர் தலைமையில் நடக்கும் வெற்றி விழா

    |

    Recommended Video

    PC studio inauguration function | Prakash Pazhani | chief guest Ishari ganesh k.rajan

    சென்னை : தமிழகத்தின் முக்கியமான கல்வி நிறுவனமான வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் தலைவருமான ஐசரி கே.கணேஷ், சென்னையில் சர்வதேச தரத்திலான பள்ளிகளையும் நடத்தி வருகிறார். பள்ளி மற்றும் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் நடத்துவதில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கும் இவர், பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தும் வருகிறார். குறிப்பாக, ரஜினியின் '2.0' படத்தில் செல்போன் கடை உரிமையாளராக நடித்திருந்தார்.

    நடிப்பதோடு மட்டும் அல்லாமல், நடிகரும் இயக்குநருமான பிரபு தேவாவுடன் இணைந்து சில படங்களை தயாரித்த ஐசரி கே.கணேஷ், இந்த ஆண்டின் ஆரம்பத்தில் 'வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். தனது தந்தை ஐசரி வேலன் நினைவாகவும், அவரது நீண்ட நாள் ஆசைக்காகவும் வேல்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருப்பதாக அறிவித்த ஐசரி கே.கணேஷ், அதன் மூலம் 'எல்.கே.ஜி', 'கோமாளி', 'பப்பி' ஆகிய மூன்று படங்களை தயாரித்தார்.

    Isari K. Ganeshs Victory Ceremony to be headed by Chief Minister

    ஒரே நேரத்தில் மூன்று படங்களை தயாரித்து வந்த வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் நிறுவனத்தின் முதல் வெளியீடாக 'எல்.கே.ஜி' படம் வெளியானது. ஆர்.ஜே. பாலாஜி கதை, வசனம் எழுதி நடித்த இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அரசியல் நையாண்டி கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தின் வெற்றி வேல்ஸ் நிறுவனத்தை உற்சாகமடைய செய்தது.

    Isari K. Ganeshs Victory Ceremony to be headed by Chief Minister

    இதையடுத்து ஜெயம் ரவி நடிப்பில் உருவான 'கோமாளி' படமும் மிகப்பெரிய வெற்றியடைந்தது. ஜெயம் ரவியின் படங்களிலேயே அதிகம் வசூலித்த படம் என்ற பெருமையையும் இப்படம் பெற்றது. இதையடுத்து ஐசரி கே.கணேஷின் சகோதரியின் மகனான வருண் ஹீரோவாக நடித்த 'பப்பி' வேல்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக வெளியாகி, அதுவும் வெற்றி பெற்றது.

    Isari K. Ganeshs Victory Ceremony to be headed by Chief Minister

    தொடங்கியது 'தர்பார்' வியாபாரம்! - ரஜினிக்கு அதிர்ச்சியளித்த லைகா நிறுவனம்தொடங்கியது 'தர்பார்' வியாபாரம்! - ரஜினிக்கு அதிர்ச்சியளித்த லைகா நிறுவனம்

    ஒரே வருடத்தில் தொடர்ந்து மூன்று வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கும் வேல்ஸ் பிலிம் நிறுவனம், அதனை மிகப்பெரிய விழாவாக கொண்டாட முடிவு செய்திருக்கிறது. அதன்படி, வரும் நவம்பர் 24 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் வேல்ஸ் நிறுவனத்தின் வெற்றி விழாவில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்கிறார்.

    Isari K. Ganeshs Victory Ceremony to be headed by Chief Minister

    2019 ஆம் ஆண்டு மூன்று படங்களை தயாரித்து, மூன்றையுமே வெற்றிப் படங்களாக்கிய வேல்ஸ் பிலிம் நிறுவனம், 2020 ஆம் ஆண்டு சுமார் 10 படங்கள் தயாரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தற்போது அந்நிறுவனத்தின் தயாரிப்பில் 5 க்கும் மேற்பட்ட படங்கள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Isari K. Ganeshs Victory Ceremony to be headed by Chief Minister

    English summary
    Founder of the University of Wales, the premier educational institution in Tamil Nadu The head of the board, Isari K. Ganesh, also runs international schools in Chennai. School He has had great success in running educational institutions, and is a minor in many films He is also playing roles. In particular, as the owner of the cellphone shop in Rajini's 2.0.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X