twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அரசியலில் குதித்த விஜய் ஹீரோயின்.. பாஜகவில் இணைந்தார்!

    நடிகை இஷா கோபிகர் பாஜகவில் சேர்ந்துள்ளார்.

    |

    மும்பை: மத்திய அமைச்சர் நிதின் கட்காரி முன்னிலையில் நடிகை இஷா கோபிகர் பாஜகவில் இணைந்துள்ளார்.

    இந்தியில் மிகவும் பிரபலமான நடிகை என பெயரெடுத்தவர் இஷா கோபிகர் (42). தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி உள்ளிட்ட மொழிப் படங்களிலும் அதிகமாக நடித்துள்ளார்.

    Isha Koppikar Joins BJP

    1998ம் ஆண்டு 'காதல் கவிதை' என்ற படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். இந்தப் படத்தை அடுத்து 'என் சுவாசக் காற்றே', 'ஜோடி', 'சந்திரலேகா', 'நெஞ்சினிலே' போன்ற படங்களில் நடித்தார். கடைசியாக அவர் விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்த 'வாஞ்சிநாதன்' படம் 2001ல் வெளியானது.

    அப்படத்திற்குப் பின்னர் திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்கிய இஷா கோபிகர், சுமார் 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க இருப்பதாக செய்தி வெளியானது. ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் அவர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எனக் கூறப்பட்டது. ஆனால், அது தொடர்பாக மேற்கொண்டு ஒரு தகவலும் இல்லை.

    இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி முன்னிலையில், அவர் பாஜகவில் இணைந்தார்.

    இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள இஷா, எனக்கு அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்புக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டுக்கு சேவையாற்றத் தயாராக இருக்கிறேன்'' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

    English summary
    Bollywood actor Isha Koppikar joined the BJP on Sunday in the presence of Union Minister Nitin Gadkari. She has been appointed as the working president of the BJP's women transport wing, news agency ANI reported.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X